மதயானைக் கூட்டம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மகளும் நடிகையாகி இருக்கிறார்.
மதயானைக்கூட்டம் படத்தில் நடித்த விஜி சந்திரசேகர் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் விஜி நடித்துள்ளார். ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். கடந்த சிலமாதங்களாக விஜியின் மகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்றும் காலம் வரும் சமயத்தில் நானே அறிவிப்பேன் என்றும் விஜி கூறி வந்தார்.
இப்பொழுது அவரது மகள் நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தனது மகள் கல்லூரி படிப்பை முடித்து விட்டதாகவும் விரைவில் வெள்ளித்திரைவில் அவர் வலம் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மகளை நடனத்தில் மிக சிறப்பாக வளர்த்தெடுத்தவர் கலா மாஸ்டர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார் விஜி. ஆனால் என்ன படம்? யார் இயக்குகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.