விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர் - ரமணா பட நினைவலைகளை பகிர்ந்த சிம்ரன்

விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர் - ரமணா பட நினைவலைகளை பகிர்ந்த சிம்ரன்
விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர் - ரமணா பட நினைவலைகளை பகிர்ந்த சிம்ரன்
Published on

விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றியதை ஆசிர்வாதமாக கருதுகிறேன் என நடிகை சிம்ரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரமணா. இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்த விஜயகாந்த் மாணவர்களை கொண்டு, ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சிகள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் வரக்கூடிய ப்ளாஸ்பேக் போர்ஷனில் விஜயகாந்துடன் இணைந்து நடிகை சிம்ரன் ஜோடியாக நடித்திருப்பார். படத்தில் இடம் பெறும் இறந்தவருக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தொடர்பான காட்சி, விஜயகாந்தை துப்புத் துலக்கும் யோகி சேது சம்பந்தமான காட்சி என பல காட்சிகள் இன்று மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படம் வெளியாகி 18 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அப்படம் தொடர்பான நினைவலைகளை நடிகை சிம்ரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ ரமணா திரைப்படம் எப்போதுமே அதற்கு உரித்தான நினைவலைகளைக் கொண்டிருக்கும். விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றியதை ஒரு ஆசிர்வாதமாக கருதுகிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவருக்கு என் நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com