சீனாவில் அதிகதிரையில் வெளியான இந்திய சினிமா.. பாகுபலி2 ரெக்கார்டை உடைக்கும் மகாராஜா! 40,000 Screens!

கடந்த ஜூன் மாதம் திரையில் வெளியாகி இந்திய ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மகாராஜா திரைப்படம், தற்போது சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் வெளியாகும் மகாராஜா
சீனாவில் வெளியாகும் மகாராஜாweb
Published on

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளிவந்தது மகாராஜா திரைப்படம். ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு படத்தை கையாண்ட இயக்குநர் நித்திலன், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து கிளைமேக்ஸில் ரசிகர்கள் எல்லோருடைய மனதையும் வென்றிருந்தார். படத்தில் நடத்திருந்த விஜய் சேதுபதி, நட்டி, முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன், பாரதிராஜா, மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி உள்ளிட்ட எல்லோரும் தங்களுடைய சிறந்த நடிப்பை கொடுத்து படத்திற்கு உயிரூட்டியிருந்தனர். 

மகாராஜா திரைப்படம்
மகாராஜா திரைப்படம்கூகுள்

திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்த மகாராஜா திரைப்படம், ஓடிடி-ல் வெளியான பிறகு அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்து பான் இந்தியா திரைப்படமாக உருமாறியது.

அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மகாராஜா திரைப்படமானது சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் வெளியாகும் மகாராஜா
பிகில், எந்திரன் வசூலை காலிசெய்த 'அமரன்'.. தமிழ்நடிகராக சிவகார்த்திகேயன் படைக்கபோகும் சாதனை!

நின்று பேசிய திரைக்கதை..

ஒரு குப்பைத்தொட்டி காணவில்லை என்ற சாதாரண திரைநகர்வுடன் படம் எதனை நோக்கி செல்கிறது என்ற மனநிலையுடன் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ரசிகரையும், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து இறுதிவரை அழத்துச்செல்லும் இயக்குநர் நித்திலன், ஒரு அழுத்தமான கிளைமாக்ஸில் யாரும் எதிர்பார்க்காத காட்சியமைப்பை கையாண்டு எல்லோருடைய மனதிலும் கதைநாயகனாக அமர்ந்துவிடுகிறார்.

கதை சொல்லல், அற்புதமான நடிப்பு, நேர்த்தியான இசை என அனைத்து பிரிவிலும் ஒரு திரைப்படமாக வெற்றிக்கண்ட மகாராஜா திரைப்படம், ஒடிடியில் வெளியான பிறகு பெரும்பாலோனோரின் விருப்பத் திரைப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் வசீகரிக்கும் ஒரு தமிழ்சினிமாவை, அது எடுத்துச்சொல்லும் ஒரு கலாச்சாரத்தை சீனாவில் இருக்கும் திரை ரசிகர்களுக்கும் விருந்தாக்கும் வகையில், மகாராஜா திரைப்படம் 40,000 சீனா திரைகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் வெளியீட்டு உரிமையை வைத்திருக்கும் ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் மற்றும் நைன் நாட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவை யி ஷி பிலிம்ஸ் (Yi Shi Films ) மற்றும் அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து இந்த வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி நவம்பர் 29, 2024 அன்று சீனாவில் 40,000 திரைகளில் படத்தை வெளியிட Yi Shi Films திட்டமிட்டுள்ளது.

சீனாவில் வெளியாகும் மகாராஜா
”ஆவேசப்படுகிறோம்.. சாபம் விடுகிறோம்.. ஆனால் திராணி உள்ள ஒருவன்..”- சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர்கள்!

அதிக திரைகளை பகிர்ந்துகொள்ளும் இந்திய சினிமா!

சீனாவில் வெளியான இந்திய சினிமாக்கள் மற்றும் அதன் திரை எண்ணிக்கையை ஒப்பிடுகையில், விஜய சேதுபதியின் மகாராஜா திரைப்படம் இரண்டாவது அதிகப்படியான திரைகளை கொண்டுள்ளது.

மகாராஜா
மகாராஜா

சீனாவில் வெளியான இந்திய சினிமாக்களில், ரஜினியின் 2.O திரைப்படம் 48,000 திரைகளை கொண்டிருந்த நிலையில், இரண்டாவது அதிகபட்சமாக 40,000 திரைகளில் மகாராஜா வெளியாகவிருக்கிறது. அடுத்தடுத்த இடத்தில் பாகுபலி 2 (18,000 திரைகள்), தங்கல் (9000 திரைகள்) முதலிய திரைப்படங்கள் இருக்கின்றன.

சீனாவில் வெளியாகும் மகாராஜா
மெல்போர்னில் வாகைசூடிய ‘மகாராஜா’ திரைப்படம்! சிறந்த இயக்குநர் விருதை வென்ற டைரக்டர் நித்திலன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com