கருப்பன் படத்தில் நடித்துள்ளதால் அனைவராலும் கவனிக்கப்படும் நாயகியாக உயர்ந்திருப்பதால் நடிகை தன்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வம் இயக்கத்தில் கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை தன்யா. இவர் சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானவர். நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. அருள்நிதி நடித்த பிருந்தாவனம் படத்திலும் நடித்துள்ளார். முதல் இரண்டு படங்களும் கொடுக்காத வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கருப்பன் படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்திருப்பதே எனக்கு வெற்றிதான். இந்த கருப்பன் படம் மதுரை கதையில் உருவாகியிருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த பெயருக்கேற்ப ரொம்ப அன்பான பெண்ணாக நடித்துள்ளேன். இந்த படத்தில் முழு மதுரை பெண்ணாக மாறி நடித்துள்ளேன். அதனால் முதல் இரண்டு படங்களையும் விட இந்த படத்தில் நான் ரசிகர்களின் கவனத்துக்கு செல்வேன்’ என்கிறார்.