“எல்லோரும் சேர்ந்து அழைத்தால், அரசியலுக்கு வர முயற்சி பண்றேன்” - விஜய் ஆண்டனி

“அனைவரும் சேர்ந்து அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
மிருணாளினி - விஜய் ஆண்டனி
மிருணாளினி - விஜய் ஆண்டனிபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - பிருந்தா

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ‘ரோமியோ’ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

‘ரோமியோ’ படம் அடுத்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பிரமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனிX

இந்த நிகழ்ச்சியில் ’ரோமியோ’ படத்தின் கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்டோர் பங்கேற்று படத்தின் சுவாரசியங்கள் குறித்துப் பேசினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி,

“காதல் எல்லோருக்கும் ஒன்றுதான்”

“ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குகிறது. திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படம் விளக்குகிறது. காதல் என்பது 2K கிட்ஸ், 90 கிட்ஸ், 80 கிட்ஸ் என இல்லாமல் காதல் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அனைத்து வயதினருக்கும் ஒன்றுதான். அன்பு எல்லோருக்குமானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது அன்புதான்.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனிட்விட்டர்

பிற மொழி படங்களின் வெற்றி குறித்து...

அனைத்துவிதமான மொழிகளில் வரும் படங்களும் தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது வரவேற்புக்குரியது. மொழிகளைத் தாண்டி படங்கள் வெற்றி அடைவது கலாசார வளர்ச்சி என நினைக்கிறேன்.

மிருணாளினி - விஜய் ஆண்டனி
“இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” - விளக்கமளித்த விஜய் ஆண்டனி! நடந்தது என்ன?

‘அரசியலுக்கு வருவீங்களா?’

அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போதுவரை இல்லை. இப்போதைக்கு இந்த வேலையில் பிஸியாக இருக்கிறேன். ஒருவேளை அனைவரும் சேர்ந்து அழைத்தால் அரசியலுக்கு வர நான் முயற்சி பண்ணலாம்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 90 சதவிகிதம் வாக்கு அனைவரும் செலுத்த வேண்டும். நோட்டாவிற்கு வாக்களிக்கக் கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு.

மிருணாளினி - விஜய் ஆண்டனி
மிருணாளினி - விஜய் ஆண்டனி

அரசியலில் worst, best என ஒன்று இருக்கும். அதற்கு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டடத்திற்கு உதவுவேன்" என்றார்.

இதையும் படிக்க: Aadujeevitham Review | நாம் எல்லோரும் ஒரு வகையில் இந்த ஆடுகள் தானோ... ஆடுஜீவிதம் ஒரு பார்வை..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com