’கணித மேதை’ ஆகிறார் வித்யா பாலன்!

’கணித மேதை’ ஆகிறார் வித்யா பாலன்!
’கணித மேதை’ ஆகிறார் வித்யா பாலன்!
Published on

உலகின் ’வேகமான மனிதக் கணினி' என்று புகழ்பெற்ற கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு சினிமா வாகிறது. சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

பெங்களூரைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. சிறுவயதில் குடும்ப சூழல் காரணமாக முறையான கல்வி பெறாத அவர், தானாக தனது அறிவால் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டார். தொடர் இலக்கங்களைக் கொண்ட சிக்கலான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில் மனக்கணக்கில் தீர்வுகாண்பதில் வல்லவர்.

பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால் மறுநொடியே அதன் கிழமையைச் சொல்லும் அளவுக்கு திறன் கொண்ட அவர், திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர். 2013 ஆண்டு தனது 83 வயதில் உடல் நலக்குறை வால் மரணமடைந்த இவரது வாழ்க்கை கதை இப்போது சினிமாவாகிறது. 

தற்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று கதைகள் சினிமாவாகி ஹிட்டாகி வருகின்றன. அந்த வரிசையில் சகுந்தலா தேவியின் கதையும் திரைப்படமாகிறது. இதை கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா தயா ரிக்கிறார்.


சகுந்தலா தேவியாக, வித்யா பாலன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெளியான என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றுக் கதை யில் நடித்திருந்தார். இப்போது மற்றுமொரு வாழ்க்கை கதையில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க ’தங்கல்’ படத்தில் நடித்த சான்யா மல்ஹோத்ராவை கேட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com