இது ஒன் -வே வா..? குழப்பத்தில் போலீசாரிடம் சிக்கிய துல்கர் - வைரல் வீடியோ!

இது ஒன் -வே வா..? குழப்பத்தில் போலீசாரிடம் சிக்கிய துல்கர் - வைரல் வீடியோ!
இது ஒன் -வே வா..? குழப்பத்தில் போலீசாரிடம் சிக்கிய துல்கர் - வைரல் வீடியோ!
Published on

ஒன்வே -ல் காரை ஓட்டிச்சென்ற துல்கர் சல்மானை போலீசார் வழிமறித்து திருப்பி அனுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவரும் மலையாள திரையுலகிலும், தமிழிலும் நடித்து வருகிறார். இவருக்கு கார்கள் என்றால் அலாதி பிரியம். இந்நிலையில் துல்கர் சல்மானில் ஸ்போட்ஸ் ரக கார் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆலப்புழா நெடுஞ்சாலையில் சிக்னலுக்கு நிற்பதற்காக ஒருவழிபாதையில் சென்று முந்தி நின்ற துல்கரின் காரை சிலர் படம் பிடித்துள்ளனர்.

விதியை மீறி ஒரு வழிபாதையில் வந்த காரை வழி மறைத்த காவலர் மீண்டும் பின்னோக்கி செல்லுமாறு சைகை காட்டுகிறார். போலீசார் சொன்னதும், பின்னோக்கி காரை ஓட்டிச்சென்ற துல்கர் மீண்டும் சரியான பாதையில் காரை செலுத்தி செல்கிறார்.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள ரசிகர்கள் சிலர், விதியை மீறியதாக யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். துல்கர் வேண்டுமென்றே விதியை மீறவில்லை அந்த சாலை சற்று குழப்பமாக இருந்ததால் ஒருவழிப்பாதை என்பதை தெரியாமல் அவர் காரை ஓட்டிச்சென்றார் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com