ஹேமா கமிட்டி | “புகார் சொல்லும் பெண் பக்கம் நிற்க வேண்டும்; நிரூபிக்க வேண்டியது..” - வெற்றிமாறன்!

சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக நாளுக்கு நால் பெண்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் வேளையில், இந்த விவகாரம் குறித்து வெற்றிமாறன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
vetrimaaran
vetrimaaranweb
Published on

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா நடத்திய நேர்காணல் உரையாடலில் இந்தியாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், பா.ரஞ்சித், மகேஷ் நாராயணன், கரண் ஜோஹர் மற்றும் ஜோயா அக்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்த உரையாடலில் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை, ஓடிடி தளங்கள் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் வரம்புகள் என பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது.

இதில் சினிமாத்துறையில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், யார் பக்கம் நிற்கவேண்டும், யாருக்கு ஆதரவாக சமூகம் செயல்பட வேண்டும் என்ற தன்னுடைய பார்வையை வைத்தார்.

vetrimaaran
“அவர்கள் எவ்வளவு கோழைத்தனமானவர்கள்” ராஜினாமா செய்த மோகன்லால் உள்ளிட்டோரை காட்டமாக விமர்சித்த பார்வதி

குற்றத்தை வெளிப்படுத்தும் பெண்களை விமர்சிக்கும் சமூகம்..

கேரளாவில் ஹேமா கமிட்டி சமர்ப்பித்த அறிக்கைக்கு பிறகு, சினிமாத்துறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் தொடர்ச்சியாக தங்களுடைய குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படுத்தும் குற்றச்சாட்டுகளின் படி, பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

vetrimaaran
vetrimaaran

இந்நிலையில் சினிமாவில் அதிகரித்துவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய வெற்றிமாறன், “சினிமாத் துறையில் ஒரு பகுதியாக இருப்பதால் கண்டிப்பாக இதைப் பற்றிப் பேச வேண்டும். ஒரு பெண் தானாக முன்வந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று கூறும்போது, இவ்வளவு நாள் சொல்லாமல் என்ன செய்துகொண்டிருந்தாய்? தற்போது சொல்வதின் நோக்கம் என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு ஆளாகிறார். இதுமிகவும் மோசமான கண்ணோட்டமாக நான் பார்க்கிறேன். ஒரு நபர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று ஒருபெண் சொன்னால், நாம் அந்தபெண் பக்கம்தான் நிற்க வேண்டும். 

குற்றம் சுமத்தப்பட்டவர் யாராக இருந்தாலும், நானாக இருந்தாலும் கூட அவர்மீது இதற்குமுன்பு எந்த குற்றச்சாட்டும் வந்ததில்லை என்பதற்காக நாம் அவர் பக்கம் நிற்கவேண்டும் என்பது சரியானதல்ல. இந்த சமூகம் பாதிக்கப்பட்டவர் பக்கம் தான் நிற்கவேண்டும். குற்றம் சுமத்தப்பட்ட அந்த நபர் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், அந்த குற்றத்தைத் தான் செய்ய வில்லை என நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் உள்ளது. அதைவிடுத்து நீ ஏன் முன்பே சொல்லவில்லை? உன் சம்மதம் இல்லாமல் நடந்திருக்குமா? என்று கேட்டு மேலும் துன்புறுத்த கூடாது. இது போன்ற விஷயங்கள் மாற வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று வெற்றிமாறன் வெளிப்படுத்தினார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், இந்த இயக்கம் ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் பரவ வேண்டும், இது பாலியல் சார்ந்த விசயங்களுடன் சேர்ந்து பாகுபாடு வேறுபாடுகளையும் களைய வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிக்க: "புகாரில் உண்மை இல்லை; குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிந்து விடுகிறேன்!" - ஜானி மாஸ்டர் மனைவி சவால்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com