வடசென்னை படத்தின் இராண்டாம் பாகம் வெப் சீரீஸாக வெளியாக வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் வடச் சென்னை. வடச்சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை காண்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன காத்திருந்தனர். இதனிடையே வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் அசுரன் படம் வெளியானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் வடசென்னை குறித்த தங்களது எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதற்கு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது “ வடச்சென்னை 2 படம் வெளியாக இன்னும் காலம் பிடிக்கும். அதை வெப் சீரிஸாக வெளியிடவும் திட்டம் இருக்கிறது. ஆனால் இது குறித்த இறுதியான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
அசுரன் படத்தை முடித்த வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து படம் இயக்கப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து அவர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இப்படத்திற்கு வாடிவாசல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது