பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார். அவருக்கு வயது 81.
கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 81. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரிஷ் கர்னாட்டின் பல உடல் உறுப்புகள் செயலிழந்தால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.
1938-ஆம் ஆண்டு பிறந்த கிரிஷ் கர்னாட் திரைப்படத் துறையில் இயக்குநராக பணியாற்றியவர். தமிழில் ‘ரட்சகன்’, ‘செல்லமே’, ‘ஹேராம்’, "காதலன்" உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். 10 தேசிய விருதுகளை வென்றவர். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார். கிரிஷ் கர்னாட்டின் ‘ராக்ட் கல்யாண்ட்’ சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிரிஷ் கர்னாட்டின் மறைவு, இலக்கிய உலகத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கர்னாட்டின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.