பிரபல பாலிவுட் நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருதை பெற்றவருமான திலீப் குமார் (98) உடல் நலக் குறைவால் மும்பையில் காலமானார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திலீம் குமாரின் உயிர் இன்று பிரிந்தது. 1922-இல் பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்த திலீப்குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-இல் பெற்றவர் திலீப் குமார்.
நடிகர் திலீப்குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1944-இல் திரையுலகில் கால் பதித்த திலீப் குமார் 65-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மொகல்-இ-ஆசம், தேவதாஸ், மதுமதி உட்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார் திலீப்குமார்.