76ஆவது வெனிஸ் திரைப்பட திருவிழா இன்று தொடங்குகிறது.
உலகின் பழமையான வெனிஸ் திரைப்பட திருவிழா இன்று தொடங்குகிறது. 76 ஆவது வெனிஸ் திரைப்பட திருவிழாவில் பல திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. அதில் ஆஸ்கர் விருது பெற்ற ரோமா, லா லா லேண்ட், கிராவிட்டி உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. இம்முறை சிறந்த இயக்குநருக்கு வழங்கப்படும் கோல்டன் லயன் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இரண்டு பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது பேசுப் பெருளாகி உள்ளது.
இந்த விழாவில் பனாமா பேப்பர் தொடர்பான ‘ஜோக்கர்’ திரையிடப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கடந்த 1977 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின் படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் திரைப்பட திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.