‘காட்டேரி’ படத்தில் நடிக்கப்போகும் நான்கு ஹீரோன்ஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
‘யாமிருக்க பயமேன்’ படத்தின் மூலம் இயக்குநரானவர் டிகே. இந்தப் பேய் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை சம்பாதித்திருந்தது. இதனையடுத்து அவர் இயக்க உள்ள திரைப்படத்திற்கு ‘காட்டேரி’ என தலைப்பிட்டிருந்தது படக்குழு. இதில் மொத்தம் நான்கு ஹீரோன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளி வந்தது. அதில் ஹன்சிகாவும் ஓவியாவும் நடிக்க இருப்பதாக வதந்தி வலைப் பின்னியது. ஆனால் அதில் உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவரை அடுத்து ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா நடிக்க இருக்கிறார். மேலும் சோனம் பஜ்வா டோலிவுட் ஹீரோயின் மனாலியும் நடிக்க உள்ளனர். இதில் வைபவ் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
“நான்கு ஹீரோயின்களுக்கும் சமமான கதாப்பாத்திரம் கொடுத்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதை இரண்டு விதங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆத்மிகா, சோனா ஆகிய இரண்டு நடிகைகளும் நகரம் சாந்த பாத்திரத்தில் நடிக்கின்றனர். வரலக்ஷ்மியும் மனாலியும் ப்ரீயட் செக்மெண்டில் வருகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.