மகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்பா வெளியிட்டார்

மகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்பா வெளியிட்டார்
மகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்பா வெளியிட்டார்
Published on

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ஒரு பக்கம் சினிமா. இன்னொரு பக்கம் லைவ் டான்ஸ் ஷோ என்று இரண்டு பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை வரட்சுமி. பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டையில் இவரது நடிப்பு அதிகம் கவனிப்புக்குள்ளானது. அதனை தொடர்ந்து விஜய்சேதுபதி-மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கும் சக்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து  வருகிறார். இந்தப் படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. 
 
வரலட்சுமியை மையப்படுத்தியே இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே சக்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது. இந்த மூன்று மொழிகளுக்கும் உண்டான மூன்று விதமான போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
 
இப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி, மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரை வரலட்சுமியின் தந்தை சரத்குமார் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com