“என் நெருக்கமான நண்பன் சிம்பு” ட்விட்டரில் மனம் திறந்த த்ரிஷா

“என் நெருக்கமான நண்பன் சிம்பு” ட்விட்டரில் மனம் திறந்த த்ரிஷா
“என் நெருக்கமான நண்பன் சிம்பு” ட்விட்டரில் மனம் திறந்த த்ரிஷா
Published on

ட்விட்டரில் தனது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார். பொழுதுபோக்கு, பிடித்த விஷயங்கள், திரைப்படங்கள், அரசியல் என கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு முடிந்த வரை த்ரிஷா பதிலளித்துள்ளார். வரும் மே 4ஆம் தேதி நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள். அதாவது தனது 35வது வயதை அவர் நிறைவு செய்யவுள்ளார். அந்த மகிழ்ச்சியை அவர் தனது ட்விட்டர் நண்பர்களுடன் கலந்துரையாடி பகிர்ந்து கொண்டுள்ளார். என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என ஒருவர் கேட்டதற்கும் கூட த்ரிஷா பதிலளித்திருக்கிறார். 

சமூக அக்கறை உள்ள , ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும் படத்தில் நடிப்பீர்களா என கேட்டதற்கு கண்டிப்பாக, கதையில் முக்கியத்துவம் இருந்தால் நடிப்பேன் என த்ரிஷா தெரிவித்தார். பிறந்தது முதல் இப்போது வரை கிடைத்த மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என்ன என கேட்க, கொடுப்பதுதான் முக்கியம் என்பதால் பரிசுகளில் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை என்றிருக்கிறார். அதோடு ஒரு ரசிகர் எப்போது கல்யாணம்? என்ன மாதிரியான கல்யாணம் என கேள்வி எழுப்பினார். அதற்கு, “ஒரு பைத்தியக்காரத்தனமாக காதலையே தான் விரும்புவதாக கூறி, காதல் கல்யாணம் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் த்ரிஷா. 

ஒரு பெண் ரசிகை வந்து எனக்கு ஹாய் சொன்னால் மட்டும் போதும் என்று கெஞ்ச, ஹாய் ஜானு, உங்களது பெயர்தான் 96 படத்தில் எனக்கும் என ஒரு சஸ்பென்ஸ் உடைத்து சென்றார். திரைப்படங்கள் குறித்து சொல்லுங்கள் என கேட்டதும் இந்த வருடம் 3 படங்கள் திரைக்கு வருவது உறுதியாகி உள்ளதாகவும், இன்னும் 2 படங்கள் நடித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தனக்கு படத்தை இயக்கும் ஆசை இல்லை என்றும் தனக்கு உலகில் பிடித்தமான இடம் நியூயார்க் தான் என்றும் மனம் சங்கடமான தருணங்களில் அங்கே செல்வேன் என்றும் அவர் கூறினார். த்ரிஷாவின் பலம் என பார்ப்பது என்ன என்ற கேள்விக்கு நம்பிக்கையே என்னுடைய மிகப்பெரிய பலம் என்றார்.

இன்னும் பல கேள்விகலுக்கு பதிலளித்த அவர் பொதுவாக பிறந்தநாளில் பீச் போவது பிடிக்கும். சிஎஸ்கே டீமை பிடிக்கும். நிச்சயம் அரசியலுக்கு வரவே மாட்டேன் , சமைக்க முயற்சிக்கிறேன், இப்போது வரை சமைத்ததில்லை,  நிவின் பாலி ஒரு நல்ல மனிதர் , சிரஞ்சீவி ஒரு ஜெண்டில்மேன் என்றெல்லாம் ஒவ்வொரு ட்வீட்டையும் குறிப்பிட்டு பதிலளித்திருக்கிறார். இப்படி சென்று கொண்டிருக்கும் போது ஒரு ரசிகர் வந்து சிம்பு உங்களுக்கு யாரு ? என் கேள்வி எழுப்பினார். சற்றும் தயங்காமல் சினிமா உலகில் எனக்கு நெருங்கிய நண்பன் சிம்பு என்று சொன்னார். சிம்பு அவருடைய பள்ளிக்கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் வயதென்ன என்ற கேள்விக்கு மட்டும் பதிலளிக்காமல் நழுவி விட்டார்.. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com