விடுமுறைகள் பண்டிகைகள் வந்துவிட்டால், சினிமாவுக்கு கொண்டாட்டம்தான்! அந்த அளவுக்கு படங்கள் குவிந்துவிடும். அதிலும் ஆஸ்தான நடிகரின் படம் அந்த தினத்தில் ரிலீஸென்றால், ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம்! அப்படி தமிழ் புத்தாண்டில் மட்டும் எக்கச்சக்கமான படங்களை, நல்ல நல்ல படைப்புகளை கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. இந்த நாளில் வெளியான பல படங்கள், காலம் கடந்து இன்றும் பேசப்படும் விஷயங்கள் பலவற்றை தன்னுள்ளே கொண்டிருக்கிறது!
சந்திரமுகி, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமென்றே சொல்லலாம். பேய் படங்களுக்கான கான்செப்டே இதன்பிறகுதான் தமிழ் சினிமாவில் வலுவாக காலூன்ற தொடங்கியது. அதேபோல, இதில் ரஜினி இன்னொருவிஷயமும் செய்திருப்பார். அது இதுவரை தமிழ் சினிமாவின் எந்த ஹீரோவும் செய்யாதது. இதை படத்தின் நாயகி ஜோதிகாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார்.
ஜோதிகா சொன்னபடியே சொல்கிறோம் அதை... “எல்லா ஹீரோஸ்க்கு ஒரு சேலஞ்ச் பண்றேன். ரஜினி சார் சந்திரமுகி படத்துல செஞ்ச மாதிரி அஜித், சூரியா, விக்ரம், மாதவன், கார்த்தி, தனுஷ்-னு எல்லா தமிழ் ஹீரோவும் ஒரு female orinated படத்துல நடிச்சு, படத்தோட பேரும்.. அதுல நடிக்கிற நடிகைக்கு கொடுத்து உங்களோட confident level-ல நிருபிக்கனும்” சொல்லியிருப்பாங்க. படம் வெளிவந்து 18 வருடங்களான பின்பும், இப்போதுவரை ஜோ-வின் இந்த சேலஞ்சை எத்தனை ஹீரோக்கள் பண்ணியிருக்கிறார்கள் என்றால்... சந்தேகம்தான்!
அலைபாயுதே படம் வெளியாகி இந்த 23 வருடங்களில், எவ்வளவோ லவ் படங்கள நாம கடந்து வந்திருப்போம். ஆனாலும் அலைபாயுதே ஸ்பெஷல் தான்! ‘When every perfect things fall in the right place, then miracle will happen’ என சொல்லுவார்களே.. அதுபோல அலைபாயுதே படத்தில் எல்லாமே நடந்தது. அதனாலதான் இப்பவும் அந்த படம் புதுசா இருக்கு. இன்றளவும் ஒரு காதல் படமெடுக்க வேண்டுமென யாராவது யோசித்தால், அலைபாயுதேதான் அதுக்கு உதாரணமா இருக்கும்!
ரஹ்மான் மியூசிக், சுஜாதா டயலாக், பிசி ஸ்ரீராம் விஸ்வல்ஸ்னு ஒரு பக்கா காம்போ பீஸ்ட் தான் இந்த படம். இந்த படத்தில், எல்லாரும் மேடி - ஷாலினி லவ் பற்றி தான் அதிகம் பேசுவோம். ஆனா, அதேநேரம் இந்த படத்துல அரவிந்த் சாமி - குஷ்பு காதலையும் சொல்லியே ஆகணும்!
‘நாம தெரியாம செய்த ஒரு தப்புக்காக ஒரு உயிர் போராடுது’ என்ற பயமும் பதற்றமும் குற்றவுணர்ச்சியுமாய் நிற்கும் குஷ்புவுக்கு, அரவிந்த்சாமி கொடுக்கு ஆறுதலும், அரவணைப்பும் ஒவ்வொரு இணையருக்கும் முக்கியம்! இன்று வரைக்கும் காதல் திருமணம் செய்யும் எல்லோருமே ஒருகட்டத்துல ‘கல்யாணத்துக்கு முன்பு இருந்த காதல் இப்போ என்னாச்சு’ என கேட்கிறார்கள் அல்லது யோசிக்கிறார்கள் என்றால், அதுக்கு விதை... அலைபாயுதே! அதுவரை காதல் டூ கல்யாணம் வரை மட்டுமே பேசிவந்த தமிழ் சினிமாவில், அலைபாயுதேதான், காதல் டூ கல்யாணம் டூ காதல் என்பதை பேசியது! அந்த வகையில் அலைபாயுதே, நிச்சயம் ட்ரெண்ட் செட்டிங் படம்தான்!
ஈகோயிஸ்ட்டிக் காதலை காட்சிப்படுத்தியிருக்கும் படம். குஷி வந்த பிறகு, சச்சின் தான் விஜய்க்கு ஒரு Out and Out காதல் படமாக இருந்திருக்கும். வழக்கமான பரபரப்பு படங்கள் - திடீர் திருப்புமுனைகள்... இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, நிறுத்தி நிதானமாக ஃபீல் குட் படமாக இது அமைந்தது. விஜய்க்கும், மாஸ் ஹீரோ என்ற பந்தா இல்லாமல்.. போற போக்கில் அப்படியே ஜாலியாக கூலாக எல்லாவற்றையும் ஹேண்டில் செய்யும் அழகான கதாபாத்திரம். நாயகன் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும், நாயகி என்றால் அழுதுகொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லாமல், RomCom படமாக சச்சின் வந்திருக்கும். சச்சினுக்கு பின்னரே இப்படியான படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வரத்தொடங்கின.
சச்சினுடைய மிகப்பெரிய மற்றொரு ப்ளஸ், வசனங்கள்.
“அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை சார். இருக்குற வரைக்கும் எல்லாரையும் சிரிக்க வைப்போம்”
“பரவாலயே.. ஒருநாள் வரலைனாலும் தேடுறல்ல...”
”அப்போ நான் போகட்டுமா? லெட்டர் போடுவீங்களா? இமெயில்...? அட்லீஸ்ட் லவ்?”
இப்படி பல டயலாக், இன்றளவும் ஃபேமஸ்தான்! அதை விஜய் ஹேண்டில் செய்திருந்த விதமும், இன்றளவும் அதே அழகோடும் அழகியலோடும் இருக்கும்
கதை என்பதை தாண்டி, அழகியல் என்ற விஷயத்திலும் இந்தப்படம்
2016-இல் வெளிவந்தது தெறி. ரூ.150 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்ஸ் அள்ளிய படம். இயக்குனர் அட்லிக்கு பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுத்த படம். இப்படத்தில் முக்கியமான விஷயமாக இருப்பது, கமர்ஷியல் மாஸ் ஹீரோவுக்கு படம் நெடுக சிங்கிள் பேரண்ட் ரோல் கொடுத்திருப்பது (இறுதி காட்சியில் மட்டுமே அது மாறும்).
கதையா இந்தப் படம், முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லும். அதாவது, ‘ஒரு குழந்தையை அம்மா வளர்த்தால் தான் நல்லா வளர்ப்பாங்க. அதுவும் பெண் குழந்தை வளர்ப்புக்கு கண்டிப்பா அம்மா அவசியம்’ என சொல்லிக்கொண்டு இருக்கும் சமூகத்தில், அப்பா வளர்க்கும் பெண் குழந்தை வளர்ப்பு பற்றி படம் பேசும் இடம் முக்கியமானது. அந்தவகையில், அப்பா இல்லாத குழந்தை Rugged-ஆ வளரும் போன்ற ஆண்டாண்டு கால கற்பிதங்களின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைச்ச படம்னு கூட சொல்லலாம்.
அதெப்படிங்க சொல்றீங்க என நீங்கள் கேட்பது புரிகிறது. சொல்றோம்...
க்ளைமேக்ஸ்! அப்பாவை வில்லன் அடித்ததும், அந்த குட்டி பொண்ணு அப்பாகிட்ட வந்து, ஏன் அடிக்கிறாங்க என கேட்கும். அப்பா கேரக்டர், ரொம்ப நேர்த்தியா ஒரு குழந்தைக்கு எப்படி சொல்லனுமோ அப்படி ஃப்ளாஷ்பேக்கை சொல்வார். ஃப்ளாஷ்பேக்படி, சமந்தா - ராதிகா கதாபாத்திரங்கள் கொல்லப்பட்டதை சொல்லணும். அதை குழந்தைக்கு சொல்லவேண்டிய அளவில்... வன்முறையில்லாமல் சொல்லுவார் அந்த தந்தை! அதை கேட்டவுடன் அந்தக் குழந்தை, “சாரி கேட்டாரா?” என கேட்க, அப்பா “இல்லை” என்றதும், வில்லனாக வரும் மகேந்திரன்கிட்டவும் போய் “சாரி சொல்லுங்க தாத்தா, தப்பு பண்ணா சாரி கேட்கணும்” என சொல்லும்!
மாஸ் ஹீரோவை சிங்கிள் பேரண்டா நடிக்க வைத்து, இதுமாதிரி நல்ல பேரண்டிங் பிராக்டீஸ் சொன்னது எல்லாம் பார்க்க சின்ன விஷயமா இருந்தாலும் அது ஒரு சமூக மாற்றத்துக்கானது. பேரண்டிங்-னாலே பொண்ணுங்க தான், தாய் தான், தாய்மைதான் என்றெல்லாம் தள்ளி விடாமல், ஆண் நினைத்தால் அவர்களாலும் ஒரு குழந்தையை நல்ல வளர்க்க முடியும்னு காட்டின படம் தான் தெறி.
தனுஷ் நல்ல நடிகர்னு சொன்னா, யாரால் தான் இல்லைன்னு சொல்ல முடியும்? அப்படியொரு தேர்ந்த நடிகரா தனுஷ் உருவான சமயத்துல, அவர் வச்ச இன்னொரு ஸ்டெப்தான், பாடலாசிரியர். நடிகர் - poet ஆனார்... பின் Direction பண்ணார். தனுஷ் எப்படி நடிப்பாருனு தெரியும். ஆனா எப்படி டைரக்ஷன் பண்ணுவாரோனு சந்தேகங்களுக்கு எல்லாம், பா.பாண்டி வரும் வரைக்குதான்.
தனக்கான வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என, முதியவரொருவர் தன்னுடைய இளவயது காதலை நோக்கி செல்வதுதான் படத்தின் ஒன்லைன். கொஞ்சம் தடுமாறினாலும், பிரச்னையாகும் கதை. அதை அவ்வளவு நேர்த்தியாக அனுகியிருப்பார் இயக்குநர் தனுஷ்! இதற்குள், preaching kids to treat their parents with respect என்பதையும் அதே நேர்த்தியோடு சொல்லியிருப்பார் இயக்குநர்...!
எந்த வயதில் தனக்கு துணை தேவைப்பட்டாலும், அதை தேடிக்கொள்ளலாம் என்பதை, சில stereotype-களை உடைத்து பேசியதற்காகவே பா.பாண்டியை பாராட்டலாம்!
இப்படி இன்னும் இதேநாளில் வெளியான பிற படங்களான மும்பை எக்ஸ்பிரஸ், கே.ஜி.எஃப். 2 போன்ற படங்களும்கூட பட்டியலில் இருக்கின்றன! அவையும் தன் கதையம்சத்தால் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டராக அமைந்தன.