நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக களமிறங்கி பட்டையை கிளப்பிய திரைப்படம் “ஜெயிலர்”. பாக்ஸ் ஆபிஸில் 500கோடி க்ளப்பில் இணைந்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “காவாலா பாடல்” தமிழ் சினிமா ரசிகர்களை வைபிலேயே வைத்திருந்தது.
அனிருத் எலக்ட்ரிக் இசையில், தமன்னா பாட்டியாவின் அசத்தலான நடனத்தில், ரஜினிகாந்தின் ஸ்கிரீன் பிரசன்ஸில் அட்டகாசமான விஸுவல் ட்ரீட்டாகவும் காவாலா பாடல் அமைந்தது. காவாலா வீடியோ சாங்கானது யு-டியூப் பக்கத்தில் 144 மில்லியன்ஸ் பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது. அதன் லிரிக்கல் வீடியோ சாங்கும் 220 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய்சேதுபடி நடிப்பில் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவல் கதையினை அடிப்படையாக கொண்டு வெளியான திரைப்படம் “விடுதலை பாகம் 1”. இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற “காட்டுமல்லி பாடல்” ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் மனத்தையும் ஆட்கொண்டது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் அற்புதமான ஒளிப்பதிவில் காட்டிற்குள் வீசிய இந்த காட்டுமல்லி வாசம் எல்லோரையும் மயக்கத்தான் செய்தது.
“பூ மணம் புதுசா தெரியுதம்மா.. என் மனம் கரும்பா இனிக்குதம்மா.. வழி நெடுக காட்டுமல்லி..” என மனந்த காட்டுமல்லி பாடல், யூ-டியூப் பக்கத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சரத்குமார், யோகிபாபு, ராஷ்மிகா நடிப்பில் உருவான குடும்பத் திரைப்படம் “வாரிசு”. இந்தபடத்திற்கு தமன் இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தன. படத்தில் இடம்பெற்ற “ரஞ்சிதமே” பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயின் திருவிழா கோல டான்ஸை நினைவுபடுத்தியது. அதுவும் விஜயின் குரலிலேயே வைப் ஏற்றிய இந்தப்பாடலில் லவ் மற்றும் டான்ஸ் என இரண்டு விதமான எமோசனையும் மிக்ஸ் செய்து இசையில் கலக்கியிருப்பார் தமன்.
“அடி ரஞ்சிதமே.. ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே… ரஞ்சிதமே ரஞ்சிதமே… உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…” என இடம்பெற்ற இந்தப்பாடல் திரையரங்கில் அனைத்து தரப்பினரையும் டான்ஸ் ஆட வைத்தது. அதிகப்படியான ரசிகர்களை பெற்ற இந்தப்பாடல், யூ-டியூப் பக்கத்தில் 68 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோவாக களமிறங்கி பட்டையை கிளப்பிய படம் “லியோ”. LCU கனக்டோடு வந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் 500 கோடி க்ளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இந்த படத்திலும் அனிருத் அவருடைய இசையில் படைத்தை தூக்கிப்பிடித்திருந்தார். அவருடைய இசையில் மாஸ் லிரிக்ஸோடு இடம்பெற்ற “படாஸ் மா” அதிகப்படியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
“சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து… இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து… பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி… கொடல் உருவுற சம்பவம் உறுதி” என இடம்பெற்ற விஷ்ணு இடவன் வரிகள் விஜய்க்கு ஒரு பக்கா மாஸ் எலமண்டாக மாறியது. இந்த பாடல் யூ-டியூப் பக்கத்தில் 66 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
லியோ திரைப்படத்தில் இடம்பெற்று விஜயின் அசத்தலான டான்ஸ் மூவ்மெண்ட்ஸால் திரையில் அனைவரையும் டான்ஸ் ஆடவைத்த பாடல் “நா ரெடி தான் வரவா”. இந்த வயசுலையும் எப்படிபா இவர் இப்படி ஆடுறார் என விஜயின் டான்ஸை மெய்மறந்து ரசிக்க வைத்த இந்த பாடல், விஜய் ரசிகர்களின் அதிவிருப்பமான பாடலாக இந்த ஆண்டில் அமைந்தது.
“தர நடுங்குற பறை அடிக்கணும் நான் ஆடத்தான்” என்று இடம்பெற்ற இந்த பாடல் வரி விஜய்க்கு தகுந்தார் போலவே இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் யூ-டியூப் பக்கத்தில் 44 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது. இதன் லிரிக்கல் வீடியோ 203 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் அனிருத் குரலில் அதிகப்படியான ரசிகர்களை ஈர்த்தது. “எக்க சக்க அழகனும் நீதானே… கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே…” எனவும், “ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு… மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு… வருதே அலையாட்டம்… வாக்கிங் வரும் சாக்லேட் சிலையாட்டம்…” எனவும் இடம்பெற்ற விவேக்கின் பாடல் வரிகள் அதிகப்படியான காதலர்களின் விருப்பமாகவே மாறியது.
ரீல்ஸ் மெட்டீரியலாக இன்ஸ்டாவை கலக்கிய இந்தப்பாடல், 39 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
லியோ படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் இசையில் Ordinary Person பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறியிருந்தார். படம் வெளியான போது எல்லோருக்கும் “நா ரெடி தான் மற்றும் படாஸ் மா” இரண்டு பாடலும் விருப்பமான பாடலாக இருந்த நிலையில், தற்போது அதிகம் ரசிகர்களால் விரும்பும் லியோ பாடலாக Ordinary Person பாடல் மாறியுள்ளது.
“I’m Just An Ordinary Person Yeah, I’m Just Peace Loving Soul” என பார்த்திபனாக அமைதியான வாழ்க்கையை விரும்பும் விஜய்க்கான பாடலாக அமைந்த இந்த பாடல், யூ-டியூப் பக்கத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
முஃப்டி என்னும் கன்னட திரைப்படத்தின் ரீமேக் படமாக இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வெளிவந்த படம் “பத்துதல”. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம் தான் பாடல்” அதிகப்படியான ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தது. இந்த பாடல் வெளியானதிலிருந்து அதிகமான ரீல்ஸ் மெட்டீரியலாகவும், டிரிபியூட் வீடியோவிற்காகவும் பயன்படுத்தப்பட்டது.
“சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்… புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்… உன் பேரை சாய்க்க பலயானைகள் சேர்ந்த போதே.. நீ சிங்கம்தான்” என்று இடம்பெற்ற விவேக்கின் பாடல் வரிகள், ஒரு கம்பீரம் மற்றும் எமோசனல் டச்சை கொடுத்தது. எப்போது கேட்டாலும் ரசிக்கும்படியாக அமைந்த இந்த பாடல், யூ-டியூப் பக்கத்தில் 34 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் நடித்து நகைச்சுவை குடும்ப திரைப்படமாக வெளிவந்தது “குட் நைட்”.சைலண்ட்டாக வெளிவந்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த காதலர்களின் மனங்களையும் வெற்றிக்கொண்டது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற “நான் காலி பாடல்” அனைத்து காதலர்களுக்கும் அவர்களுடைய காதலன்/காதலிக்கு டெடிகேட் செய்யும் பாடலாகவே மாறியது.
“கை பிடி இடுக்குல காதலும் ஏறுது” என இடம்பெற்ற மோகன் ராஜன் பாடல் வரிகளுக்கு, புதிய உயிரை கொடுத்திருப்பார் இசையமைப்பாளர் சீன் ரோல்டன். அதிகப்படியான ரசிகர்களை பெற்ற இந்த பாடல், யூ-டியூப் பக்கத்தில் 31 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.
இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக வெளிவந்தது “துணிவு”.அனிருத் இசையில் இந்தப்படத்தில் இடம்பிடித்த “சில்லா சில்லா” பாடல் அதிகப்படியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
“இருப்பது ஒரு லைஃப்பு… அடிச்சிக்க சியர்ஸ்… போனதெல்லாம் போகட்டும்டா… தேவயில்ல டியர்ஸ்…” என இடம்பெற்ற பாடல் வரிகள் பெரும்பாலான ரசிகர்களை வைபிலேயே வைத்திருந்தது. இந்தப்பாடல் யூ-டியூப் பக்கத்தில் 31 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.