நடிகர் டாம் அல்டர் மரணம்: சச்சினை முதன்முதலில் பேட்டி எடுத்தவர்

நடிகர் டாம் அல்டர் மரணம்: சச்சினை முதன்முதலில் பேட்டி எடுத்தவர்
நடிகர் டாம் அல்டர் மரணம்: சச்சினை முதன்முதலில் பேட்டி எடுத்தவர்
Published on

பிரபல இந்தி நடிகர் டாம் அல்டர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

இந்தியாவில் குடியேறிய அமெரிக்கர் டாம் அல்டர். சத்யஜித்ரேவின் ஷத்ரஞ்ச் கே கிலாடி, ஷ்யாம் பெனகலின் ஜூனுன், மனோஜ்குமாரின் கிரந்தி, ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி உட்பட சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள டாம் அல்டர், டெலிவிஷனில் ஒளிபரப்பான ஜூனுன் தொடர் மூலம் இன்னும் பிரபலமானார். 

70-80 களில் பிரபலமான இந்தி நடிகராக இருந்த இவர், விளையாட்டு பற்றி பத்திரிகைகளிலும் எழுதிவந்தார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பிரபலமாவதற்கு முன், அவரை முதன் முதலாக டி.வியில் பேட்டி எடுத்தவர் இவர்.

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் நேற்று இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த டாம் அல்டருக்கு மனைவி கரோல், மகன் ஜாமி, மகள் அப்ஷான் உள்ளனர்.
அல்டருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. டாம் அல்டர் மறைவுக்கு இந்தி திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com