மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் தெரிவித்தார்.
நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அனிதாவின் தந்தைக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக, கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். நல்ல மருத்துவராக ஆகியிருக்க வேண்டியவர் அவர். தமிழக இளைஞர்களுக்கு இந்த நாள் கறுப்பு தினம்’ என்று குறிப்பிட்டார்.