VPF கட்டணத்தை ஏற்க வேண்டும் என்ற பாரதிராஜாவின் நிபந்தனையை ஏற்க முடியாது என தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முன்பு கூறியது போலவே VPF கட்டணத்தை நாங்கள் ஏற்க முடியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று 12 மணிமுதல் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை திட்டவட்டமாக எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், குறிப்பாக தயாரிப்பாளர்களை போலவே திரையரங்கு உரிமையாளர்களான நாங்களும் VPF கட்டணத்தை ஏற்க முடியாது. தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து டிஜிட்டல் நிறுவனங்களுடன் பேசி இந்த கட்டணத்தை கட்ட முடியாது என தெரிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தென் இந்தியாவில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழகம், கேரளா ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய திரையரங்கு உரிமையாளர்களை சேர்த்து புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு சில அழுத்தங்களை கொடுக்க முடியும் என எதிர்ப்பார்க்கிறார்கள். தங்களது முடிவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒத்துவராவிட்டால் பிறமொழி படங்கள் திரையிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.