மீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு

மீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு
மீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு
Published on

மீடூ விவகாரம் தொடர்பாக 9 பேர் கொண்ட குழுவை தென்னிந்திய நடிகர் சங்கம் அமைத்துள்ளது. 

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை மீடூ எனும் ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகளவிலான புகார்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், தமிழ் திரையுலகில் பெண்கள் பாதுகாப்புக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுவடைந்தது. 

இதனைத் தொடர்ந்து, தற்போது 9 பேர் கொண்ட குழுவை தென்னிந்திய நடிகர் சங்கம் அமைத்திருக்கிறது. இந்தக் குழுவின் தலைவராக நடிகர் சங்கத் தலைவர் நாசரும், உறுப்பினர்களாக விஷால், கார்த்தி, ரோகிணி, குஷ்பூ, சுஹாசினி, பூச்சி முருகன் ஆகியோரும் செயல்படவுள்ளனர். 

இவர்களோடு வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் நடிகர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவுள்ளனர். திரைத்துறை பெண்களின் பாலியல் ரீதியான புகார்களை இந்தக் குழு நேரடியாக விசாரித்து, அதன்மீது நடவடிக்கைகளை எடுக்கும் என நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com