“நான் பார்த்த முதல் முகம் நீ” - கவனம் ஈர்க்கும் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ!

“நான் பார்த்த முதல் முகம் நீ” - கவனம் ஈர்க்கும் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ!
“நான் பார்த்த முதல் முகம் நீ” - கவனம் ஈர்க்கும் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ!
Published on

நான் பார்த்த முதல் முகம் நீ': சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியுள்ள வலிமை இரண்டாவது பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வலிமை' பொங்கலையொட்டி வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இப்படத்தின், முதல் பாடலான 'நாங்க வேற மாரி' பாடல் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இதுவரை யூடியூபில் 35 மில்லியன் பார்வைகளையும் 1 மில்லியன் லைக்ஸ்களையும் 'நாங்க வேற மாரி' கடந்துள்ளது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது இரண்டாம் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்பாடலையும் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'நான் பார்த்த முதல் முகம் நீ... நான் கேட்ட முதல் குரல் நீ' என்று சித் ஸ்ரீராம் குரலோடு யுவன் இசையும் கேட்பவர்களைத் தாலாட்டுகிறது.

இந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அஜித் உடன் அவருக்கு தயாக நடிக்கும் நடிகை சுமித்ராவின் படமும் சேர்த்தார் போல ஒரு போஸ்டர் தயார் செய்திருந்தார்கள். அதேபோல், ப்ரோமோவிலும் ஒரு பசுவும் அதன் காம்பில் பால் அருந்தும் கன்று குட்டியும் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றும் இடம்பெற்றிருக்கும். அதேபோல், ஒரு தாய்க்குருவி தனது குட்டிகளுக்கு இரை ஊட்டுவது போன்ற ஒரு போஸ்டரும் இடம்பெற்றிருக்கும். இந்த போஸ்டர்களே தாய்மையை போன்றும் வகையில் அமைந்திருக்கும்.

ஏற்கெனவே, அஜித் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'வரலாறு' படத்தில் 'தீயில் விழுந்த' பாடல் மகன் - அம்மாவுக் கிடையேயான பாசத்தை உருக்கமுடன் வெளிப்படுத்தியது. 15 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித் படத்தில் அம்மா செண்டிமெண்ட் பாடல் இடம்பிடித்து கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com