“எனக்காக யாரிடமும் என் அப்பா வாய்ப்பு கேட்டதில்லை” - சூர்யா ஓபன்டாக்

“எனக்காக யாரிடமும் என் அப்பா வாய்ப்பு கேட்டதில்லை” - சூர்யா ஓபன்டாக்
“எனக்காக யாரிடமும் என் அப்பா வாய்ப்பு கேட்டதில்லை” - சூர்யா ஓபன்டாக்
Published on

‘உறியடி2’டீஸர் மற்றும் பாடல்களை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா இன்று வெளியிட்டார். 
 
2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, ‘உறியடி2’ படத்தின் இயக்குனர் விஜயகுமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில்.“இந்தப் படத்திற்காக இசையமைக்க இயக்குனர் விஜயகுமார் என்னுடன் தொடர்பு கொண்ட போது, நான்  ‘96’ படத்தின் இசையமைப்பு பணியை தொடங்கவில்லை. இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையமைத்து, கிட்டத்தட்ட இறுதி நிலையில்தான் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் படத்தை பார்வையிட்டார். அது வரைக்கும் எனக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது. இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தை கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது.” என்றார்.

இயக்குனர் விஜயகுமார் பேசுகையில்.“இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் யோசிப்போம். ஈகோ இருக்கக் கூடாது. திறமை இருக்க வேண்டும். டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். முதன்முறையாக இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார். 

தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குனர்களை போலீசாக நடித்தவர்களிடம்  உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம். அதேபோல் உதவி இயக்குனர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம். 

ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்தக் காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள். அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம்” என்றார்.

சூர்யா பேசுகையில்,“இங்கு வந்தவுடன் ஒரு சில தொழில்நுட்ப கலைஞர் என்னிடம்,“நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் சார்”என்று சொன்னபோது எனக்குள் நாம் சீனியராகி விடுகிறோமோ என்ற எண்ணம் எழுந்தது. இதுவரை திரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது. அவர்களுடைய வேலையில் சென்று குறுக்கீடு செய்யவும், ஆலோசனை சொல்லவும் என்னை நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை. அது தேவையற்றது.  

எங்க அப்பா படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குனரை சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது. ஆனால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்த விஜயகுமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம். ‘உறியடி2’ ஏன் வரவில்லை? என்ற கேள்வி எழுந்தது. ‘உறியடி’ வந்து நான்கைந்து வருடங்களுக்கு பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com