பாலியல் தொழிலாளி அடையாளம்: நடிகை ஸ்ரீரெட்டி விரக்தி
’சினிமாவில் வீரம் காட்டுகிறார்கள் ஹீரோக்கள். வெளியே அநியாயம் நடக்கும்போது அவர்களின் வீரம் எங்கே போய்விடுகிறது? ‘ என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கேள்வி எழுப்பினார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டி இருந்தார், நடிகை ஸ்ரீரெட்டி. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் சங்கம், அவர் நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்துவிட்டது. தெலுங்கு நடிகர்கள் யாரும் இவருடன் பணியாற்ற மாட்டார்கள் என்றும் கூறியது. இதையடுத்து ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதற்கிடையே, இயக்குனர் சேகர் காமு லா, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராம் டகுபதி, இயக்குனர் கோனா வெங் கட் ஆகியோர் மீது பாலியல் புகார் கூறினார். இது தெலுங்கு திரையுலகில் மேலும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம், நடிகை மீதான தடையை நீக்கியும் அவரோடு மற்றவர்கள் பணியபுரியவும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் பெண்கள் அமைப்பு ஐதராபாத்தில் கருத்தரங்கு ஒன்றை நேற்று நடத்தியது. இதில் நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் ஏராளமான துணை நடிகைகள் கலந்துகொண்டனர். அப்போது, தெலுங்கு பேசும் துணை நடிகைகளுக்கு மாதத்தில் 10 நாட்க ளாவது வேலை கொடுக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீரெட்டி கூறும்போது, ’சினிமாவில் அநியாயத்தைக் கண்டால் வீரம் காட்டுகிறார்கள் ஹீரோக்கள். வெளியே அநி யாயம் நடக்கும்போது அவர்களின் வீரம் எங்கே போய்விடுகிறது? பாலியல் ரீதியாக என்னை பயன்படுத்திக் கொண்டார் கள் என்று நான் வெளிப்படுத்தியதால், அவர்கள் என்னை பாலியல் தொழிலாளியாக அடையாளப்படுத்தப் பார்க்கிறார்கள். சினிமா தொழில், எங்களை பாலியல் சுரண்டலுக்குத் தள்ளியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர்கள் தலையிட்டு தீர்வு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.