சர்வதேச திரையுலகின் உச்சகட்ட அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள 91 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை குமைல் நன்ஜியனி, ட்ரைஸி எல்லிஸ் ராஸ் கூட்டாக அறிவித்தனர். சிறந்த படத்திற்கான பிரிவில், முதன்முறையாக ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘பிளாக் பந்தெர்’ பரிந்துரைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும் இப்பிரிவில் இடம்பெற்றுள்ள vice, a star is born, roma போன்ற படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த ஆண்டு வெளியான கருப்பு வெள்ளை படமான ரோமா மற்றும் லாந்திமோஸ் இயக்கிய நகைச்சுவை படமான தி ஃபேவரைட் ஆகிய இரண்டு படங்களும் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்டியலில் இந்தியாவின் Period End of sentence என்ற படம் ஆவணப்படங்களுக்கான பிரிவில் இடம்பிடித்துள்ளது.
சிறந்த நடிகருக்கான பிரிவில், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபராக vice படத்தில் நடித்த Christian Bale, கூப்பர், வில்லெம், ராமி மாலெக், விங்கோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. Christian Bale ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு The Fighter படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் பாடகியும், பாடலாசிரியருமான lady gaga, அபரிசியோ, மெல்லிசா, ஒலிவியா கொல்மென், க்லென் க்லொஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிறந்த இயக்குனருக்கான போட்டியில், ரோமா படத்தை இயக்கிய குவாரொன் , vice படத்தை இயக்கிய Adam Mckay, The Favourite படத்தை இயக்கிய யொர்கோஸ் மற்றும் ஸ்பைக் லீ, பவேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
சிறந்த பின்னணி இசைக்காக black panther, ப்ளாக்னெஸ்மன், Isle of dogs ஆகிய படங்களின் இசையமைப்பாளர்கள், மேலும் nicholas Britell, Marc Shaiman ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. The Favourite மற்றும் roma ஆகிய இரண்டு படங்கள் அதிகபட்சமாக 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. பிராட்லே கூப்பர் இயக்கிய ஸ்டார் இஸ் பார்ன், ஆடம் மெக்கே இயக்கிய வைஸ் ஆகிய திரைப்படங்கள் 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாக சூப்பர் ஹீரோ படமான black panther சிறந்த படம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.