பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் என தாம்பரம் தனியார் கல்லூரியிடம் உயர் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த வாரம் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய விஜய், நிகழ்கால அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க எனத் தெரிவித்த விஜய், சுபஸ்ரீ மரணம் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
தமிழக அரசுக்கு எதிராக பல கருத்துகளை கூறியதால் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் என தாம்பரம் தனியார் கல்லூரியிடம் உயர் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. எந்த அடிப்படையில் திரைப்பட நிகழ்வுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என உயர் கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளது.