காஞ்சிபுரத்தில் செப்.15ல் பட்டு பூங்கா திறப்பு- சோதனை முறையில் தறி நெய்யும் பணிகள் தீவிரம்

காஞ்சிபுரத்தில் செப்.15ல் பட்டு பூங்கா திறப்பு- சோதனை முறையில் தறி நெய்யும் பணிகள் தீவிரம்
காஞ்சிபுரத்தில் செப்.15ல் பட்டு பூங்கா திறப்பு- சோதனை முறையில் தறி நெய்யும் பணிகள் தீவிரம்
Published on

12 ஆண்டுகளுக்கு பிறகு பட்டு பூங்காவில் முதல் தறி சோதனை ஓட்டத்தில் பட்டுசேலை செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டு ஜவுளி மேம்பாட்டு துறை மற்றும் தமிழக கைத்தறி துறை பங்களிப்பு உடன் 90 கோடி மதிப்பீட்டில் ’பட்டு பூங்கா திட்டம்’ துவக்க அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணிகளை துரிதப்படுத்த தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அண்ணா பிறந்த தினமன்று பட்டுப் பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தனர்.

இந்நிலையில், இதற்கான தறி கூடம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கினர்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திறக்க உள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள தறியில் நெசவாளர்கள் சோதனை முறையில் சேலை நெய்து வருகிறார்கள். மேலும் தறிக்கூடம் மற்றும் கட்டுமானப்பணிகள் வேகமெடுத்துள்ளது. மொத்தம் 24 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 22 அரங்குகளில் 96 தறி கூடங்களும் மீதமுள்ள இரண்டு அரங்குகளில் 24 தறி கூடங்களும் அமைய உள்ளன. சுமார் 2400 தறிகளில் நெசவாளர்கள் சேலை நெய்ய இருக்கிறார்கள். அதன் முதற்கட்டமாக முதல் தறி இயந்திரத்தை சோதனை ஓட்டத்தில் நெசவாளர்கள் தற்போது பட்டு சேலையை நெய்து வருகிறார்கள். செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் பட்டு பூங்கா பணிகள் துவங்குவது நிச்சயம் என தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com