பிரிகேடியர் லிட்டெரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

பிரிகேடியர் லிட்டெரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்
பிரிகேடியர் லிட்டெரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்
Published on

குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ முறைப்படி இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, உயிரிழந்த பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக பிரார் சதுக்கத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஹரியானா முதலமைச்சர் கட்டார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகளும் இறுதி மரியாதை செலுத்தி, தங்களது வீரவணக்கத்தை பிரிகேடியருக்கு அர்ப்பணித்தனர். தகனம் செய்வதற்கு முன்பாக லிட்டெரின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியகொடி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com