பிரதமர் பதவி மன்மோகன் சிங்கிற்கு கிடைத்தது எப்படி? அவர் யாரால் இயக்கப்பட்டார் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் ’தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்’ படத்தில் அனுபம் கேர் நடிக்க இருக்கிறார்.
2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அப்போது சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பார் எனக் கருதப்பட்டது. எதிர்பாராதவிதமாக மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். 2000 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்து வந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் யாருக்கேலாம் கைப்பாவையாக நடந்து கொண்டார். அவரை ஆட்டி வைத்தவர்கள் யார் என மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ‘தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் ; மேக்கிங் அண்ட் அன்-மேக்கிங் ஆப் மன்மோகன் சிங்’என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப்புத்தகம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், ‘சஞ்சயா பாரு என் முதுகில் குத்திவிட்டார்’ என வேதனை தெரிவித்திருந்தார் மன்மோகன் சிங்.
சஞ்சயா பாரு எழுதிய அந்தப்புத்தகத்தின் தலைப்பான ‘தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்’ ஹிந்தியில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாத்திரத்தில் அனுபம் கேர் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சுனில் போத்ரா தயாரிக்க இருக்கிறார். ஹன்சல் மேத்தா திரைக்கதை அமைக்க, விஜய் ரத்னாகர் குட்டே இயக்க இருக்கிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இதனை உறுதி செய்து இருக்கிறார் அனுபம் கேர். இந்தப்படம் வெளிவந்தால் பல சர்ச்சைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.