‘நீட்’டுக்கு எதிராக போராட வாருங்கள் - இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு

‘நீட்’டுக்கு எதிராக போராட வாருங்கள் - இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு
‘நீட்’டுக்கு எதிராக போராட வாருங்கள் - இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு
Published on

"பாஜகவின் நேர்மையற்ற அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இழைத்து வந்த துரோகத்திற்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாக திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். 

இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் திட்டங்களில் ஒன்றுதான் "நீட்" தேர்வு.  இந்தச் சதியை மாணவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இப்போது மாணவர்களுக்குப் பக்க பலமாக இருந்து மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராட்டம் நடத்த தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் பகையை மறந்து ஓரணியில் திரண்டு சாதித்துக் காட்ட  வேண்டும். 
இதைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் எக்காலத்திலும் நம் உரிமையை பெற முடியாது. எனவே தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், கட்சி பாகுபாடு கடந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள கேட்டுக்கொள்வோம்! நமது உரிமையை நிலைநாட்டுவோம்!”என அழைப்பு விடுத்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com