நண்பா நண்பீஸ்-க்கு தரமான சம்பவம் தயார்... வந்துவிட்டது ‘தளபதி 69’-ன் சூப்பர் அப்டேட்!

தளபதி 69 படத்தின் அப்டேட் இதோ.....
தளபதி 69
தளபதி 69எக்ஸ் தளம்
Published on

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றநிலையில், நேற்று அப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி அங்கும் ட்ரெண்ட் அடித்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் இறுதிப்படமாக உள்ள தளபதி 69 குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அப்டேட் வருவது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், அரசியல் கட்சியை விஜய் தொடங்கி இருப்பதால், இதுவே அவரது கடைசி திரைப்படம் என்று சொல்லப்பட்டிருப்பது, ரசிகர்களை ஒருபுறம் இந்த அப்டேட்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறலாம். என்னதான் இருந்தாலும்... என கடைசி படத்தை கொண்டாட்டமாகவே விஜய் ரசிகர்கள் நினைக்கின்றனர்.

தளபதி 69 திரைப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்க, “விஜய் 69 படம் முழுக்க முழுக்க அனைவரும் விரும்பக்கூடிய கமர்சியல் படமாக இருக்கும். அதில் அரசியல் சார்ந்த கருத்துகளும் இருக்கும்” என்று இயக்குநர் ஹெச் வினோத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயரை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

தளபதி 69
தளபதி 69 அப்டேட்: லியோ-க்கு பின் இணையும் விஜய் - கௌதம் மேனன் காம்போ! உடன் கைக்கோர்க்கும் பிரியாமணி!

அதன்படி விஜய்யுடன் இப்படத்தில், அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே மற்றும் பிரேமலு பட நடிகை மமிதா பைஜு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன் முதலியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘தளபதி 69’ பூஜை
‘தளபதி 69’ பூஜை

இப்படி தொடர்ந்து பல அப்டேட்கள் வந்த நிலையில், மற்றொரு சூப்பரான அப்டேட்டும் விஜய் ரசிகர்களுக்கு தற்போது வந்துள்ளது. அது என்னவென்றால், ‘தளபதி 69’ படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இன்னும் சில சுவாரஸ்ய அப்டேட்கள் வருமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விஜய் ரசிகர்கள் குஷிமோடில் தற்போது உள்ளனர். இன்று காலையில்தான், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழாவானது நடைபெற்றது. தொடர்ந்து கட்சித் தலைவராக விஜய் தன் முதல் கடிதத்தை தொண்டர்களுக்கு எழுதினார். இதனைத்தொடர்ந்து தற்போது இவ்வறிவிப்பு வெளியாகி இருப்பது, ரசிகர்களுக்கு டபுள் டமாக்காதான்...!

தளபதி 69
“அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா என கேட்கின்றனர்... இனிமேல் புரிந்துகொள்வர்”- தவெக தலைவர் விஜய்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com