”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை அடுத்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே, டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைக் கண்டித்து மதுரையில் பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.