ஜாக்குலினுக்கு டாப்சிக்கு மோதல் என வெளியான செய்திக்கு நடிகை டாப்சி விளக்கம் அளித்துள்ளார். நான் தோழிகளுடன் சண்டை போடுவதில்லை என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
ஜுட்வா 2 படத்தில் நடிக்கும்போது டாப்சிக்கும் ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும் இடையே மோதல் என்று செய்தி பரவியது. டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் ஜோடியாக டாப்ஸி, ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் நடித்துள்ள பாலிவுட் படம் ஜுட்வா 2. இதில் வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங்கில்தான் இருவருக்குமான மோதல் நடந்துள்ளது. இந்த மோதல் பற்றி செய்திகள் வந்தாலும் டாப்சி மெளனமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்சயம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஜாக்குலின் எப்பொழுதும் பாசிட்டிவாக இருப்பார். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவரால் மட்டும் எப்படி இது முடிகிறது என்று தெரியவில்லை. ஜாக்குலினை போல நானும் எப்போதும் சிரித்த முகமாக இருக்க விரும்புகிறேன். அவரிடம் இருந்து அந்த நல்ல குணத்தை பின்பற்ற நினைக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும், ஜாக்குலினுக்கும் இடையே சண்டையே வராது. நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். என் தோழிகளுடன் நான் சண்டை போடமாட்டேன். ஜாக்குலின் அவர் வேலையை செய்கிறார், நான் என் வேலையை பார்க்கிறேன். எங்களுக்கு இடையே போட்டி கிடையாது என்று கூறியுள்ளார்.