”இரண்டு வாரம் படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது”-திருப்பூர் சுப்பிரமணியம் வைக்கும் கோரிக்கைகள்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், திரையரங்க உரிமையாளர்களுக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
கங்குவா - இந்தியன் 2
கங்குவா - இந்தியன் 2web
Published on

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து கங்குவா திரைப்படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன. முதல்காட்சி முடிவதற்குள்ளாகவே ஒரு படத்தின் விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் வந்துவிடுகின்றது. அதற்கு யூடியூபர்களும், அதிகப்படியான யூடியூப் சேனல்களில் அளிக்கப்படும் விமர்சனங்களும் பெரிய பங்காற்றுகின்றன.

இதையும் கடந்து சமீபத்தில் இரண்டு திரைப்படங்களுக்கு வேண்டுமென்றே டிசாஸ்டர் என எக்ஸ்தளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டன. அதில் கோட் திரைப்படமும், வேட்டையன் திரைப்படமும் பாதிப்பை எதிர்கொண்டன. வேட்டையன் திரைப்படம் பெரும்பாலான மக்களிடம் வரவேற்பை பெற்றநிலையில் மோசமாக இருக்கிறது என டிரெண்ட் செய்யப்பட்டது.

கங்குவா
கங்குவா

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், திரையரங்க உரிமையாளர்களுக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

கங்குவா - இந்தியன் 2
”ஆவேசப்படுகிறோம்.. சாபம் விடுகிறோம்.. ஆனால் திராணி உள்ள ஒருவன்..”- சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர்கள்!

2 வாரத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக்கூடாது..

திரையரங்க உரிமையாளர்களுக்குச் சில கோரிக்கை வைத்திருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சி தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியாகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் காலை 4 மணிக்கு வெளியாகிறது. இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் சிறப்பு காட்சி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இரண்டு வாரக் காலத்திற்குப் படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. நீதிமன்றத்தை அணுகி இரண்டு வாரக் காலத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது எனத் தடை வாங்க வேண்டும்.

பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால், அதிகாலை காட்சியில் சினிமாவை பார்த்துவிட்டு, தமிழகத்தில் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே யூடியூப் சேனல்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் காலி செய்கிறார்கள்.

சமீப காலங்களில் இப்படியான விமர்சனங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கிறது. தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என யூடியூப்பர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என நாமே கட்டுப்பாடு விதித்துவிட்டு அதை மீறி வருகிறோம். அப்படி வீடியோ எடுப்பதை தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அனுமதிப்பது நமது வியாபாரத்தை நாமே சிதைப்பது போன்றது.

இந்தியன் 2, வேட்டையன் படங்களும், சமீபத்தில் 'கங்குவா' படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்கள் வருவது பாதிக்கப்பட்டது.

இந்தியன் 2
இந்தியன் 2

கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்யத் தடை வாங்கியதைக் கேள்விப்பட்டேன். அது போலவே இங்கும் தயாரிப்பாளர் சங்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கங்குவா - இந்தியன் 2
ரஜினியின் ’எந்திரன்’ வசூலை முறியடிக்கவிருக்கும் அமரன்! ரூ.300 கோடி கிளப்பில் சிவகார்த்திகேயன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com