தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
Published on

முதல் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடக்க இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் சேரன். சங்கப் பதவியை விஷால் ராஜநாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சேரனின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இன்று சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் “நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் வரும் நாளை(10.12.2017) காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பொதுக்குழு கூட்டம் குறித்து சங்க விதியின்படி 21 தினங்களுக்கு முன்பாகவே நிரந்தர உறுப்பினர்கள் தபால் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். அத்துடன் நமது சங்க விதியில் சில மாற்றங்கள் செய்து பழைய மற்றும் மாற்றப்பட்ட புதிய விதி மாற்றங்களையும் 1211 உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளோம். ஆனால் 07.12.2017 அன்று நமது சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தினை அணுகி பொதுக்குழு கூட்டம் நடைபெற கூடாது என தடை உத்தரவு கோரியுள்ளார்கள். ஆனால் நீதியரசர் கார்த்திகேயன் மனுவை நிராகரித்து விட்டார். அத்துடன் பொதுக்குழு கூட்ட நடவடிக்கையை பார்வையிட ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் ராமநாதனை கண்காணிப்பாளராக நியமித்து உள்ளார். 

நாங்கள் தான் பொதுக்குழு நடத்த ஆவண ஏற்பாடுகளை செய்துள்ளோம். நீதியரசர் கார்த்திகேயனின் ஆணையை ஏற்று நீதியரசர்  ராமநாதன் பார்வையில் பொதுக்குழுவை நடத்த இருக்கிறோம். எங்களுக்கு பொதுக்குழுவை நடத்துவதில் எந்தக் கருத்து வேறுபாடு​​ம் இல்லை என்பதையும் இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com