ஜிமிக்கி கம்மல் வீடியோ பெண்ணிற்கு தமிழ் திரைப்பட இயக்குநர் உறியடி!

ஜிமிக்கி கம்மல் வீடியோ பெண்ணிற்கு தமிழ் திரைப்பட இயக்குநர் உறியடி!
ஜிமிக்கி கம்மல் வீடியோ பெண்ணிற்கு தமிழ் திரைப்பட இயக்குநர் உறியடி!
Published on

நீட் தேர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வீடியோவை பதிவிடுமாறு ஜிமிக்கி கம்மல் வீடியோவில் நடனமாடிய பெண்ணிற்கு உறியடி திரைப்பட இயக்குநர் விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

உறியடி என்ற முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் விஜயகுமார். அவ்வப்போது கருத்துக்களை பலமாக முன்வைத்து வருபவர். இந்நிலையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், ’பாடத்திட்டத்தில் ஒரு மாற்றம் கொண்டு  வராமல் பரீட்சை திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது சரியா? கிராமப்புறத்தில் அரசு பள்ளியில் கஷ்டப்பட்டு படிக்கிற ஒரு மாணவர் அந்தப்பாடத்திட்டத்தை மட்டுமே படித்து நீட் தேர்வை எதிர்க்கொள்ள முடியுமா? அப்படி முடியாவிட்டால் அந்த பாடத்திட்டத்தை தானே முதலில் சரி செய்ய வேண்டும். 

பாடத்திட்டத்தின் தரத்தைத்தானே உயர்த்த வேண்டும். இப்படி எதையும் செய்யாவிட்டால் அந்த மாணவர்களின் முன்னேற்றத்தை தடுப்பதாகத்தானே அர்த்தம். கஷ்டப்படுகிற, வறுமையில் வாழ்கிற மாணவர்களின் விதலை கல்வி மட்டும் தான். அப்படியானால், அவனது கல்வியை, மேற்படிப்பை தட்டிப்பறிக்கிறோம் இல்லையா? ஏற்கெனவே வசதியாக இருக்கிறவனுக்குதான் கல்வி எனக் கூறுகிறார்களா? இருக்கிறவன்தான் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வான் என்றால் இது நாடா? இல்லை காடா? இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டாமா? போராட வேண்டாமா? சிலர் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். போராட முடியாதவர்களுக்கு என்னுடைய கருத்து என்னவென்றால், நமக்காகத் தான் அரசியல்கட்சிகள் எல்லாம் இருக்கிறது.

 நம்மிடம் ஓட்டுக்கேட்டு வரும்போது அவர்கள் ‘உங்களுக்காகத் தான் இருக்கிறோம். உங்களுக்காகத்தான் சேவைகள் செய்கிறோம்’எனச் சொல்கிறார்கள். அவர்களிடம் கேட்போம். எங்களுக்காக சேவை செய்வதாக கூறும் நீங்கள் எங்களுக்காக போராட்டம் நடத்துங்கள். தினமும் உண்ணாவிரதம் இருங்கள். நீங்கள் எதுக்காக ஒருநாள் மட்டும் சாலை மறியல் செய்து விட்டு சிறிது நேரத்திலேயே கைதாகி விட்டு ஒரே நாளில் போய்விடுகிறீர்கள். அதை விடுத்து தொடர்ந்து களத்தில் நின்று போராடுங்கள் என அவர்களிடம் கேளுங்கள். அரசியல்வாதிகளின் அலுவலகத்திற்கு சென்று கேளுங்கள். அவர்களது ஃபேஸ் புக் பக்கத்தில், என தொடர்ந்து கேளுங்கள். 

நிறைய மாணவர்கள் நீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தை அடிவாங்கி கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு பெரிய அளவில் கூட ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பொழுது போக்கு விஷயத்தை ட்ரெண்ட் பண்ண வேண்டாமே.  இப்போது ஜிமிக்கி கம்மல் என்கிற வீடியோ பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. நீட் தேர்வு போராட்டத்தால் யாரும் சிரிக்காமல், சாபிடாமல் இருக்கப்போவதில்லை. எல்லாம் சரிதான். பொழுதுபோக்கு விஷயத்தை ட்ரெண்ட் செய்யும்போது நீட் ஆதரவாளர்கள் நம்மை ஏளனமாகத்தானே பார்ப்பார்கள். அது தப்பில்லையா?  ஜிமிக்கி கம்மல் வீடியோவில் நடனமாடியா அந்த பெண்ணிடம் ஒரு விண்ணப்பம். முடிந்தால் நீட் தேர்வை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்துப்பேசி ஒரு வீடியோவை பதிவு செய்யுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com