லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. ‘லியோ’ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில் தற்போது படப்பிடிபுக்கான ஏற்பாடுகள் வேகவேகமாக நடந்துவருகின்றன. இதற்கிடையே நேற்று முன்தினம் விஜய் விமான நிலையமொன்றில் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாரனது.
இதையொட்டி, விரைவில் Thalapathy 68-ன் படப்பிடிப்பு தொடங்குமென தகவல்கள் பரவின.
இதன் அடுத்தகட்டமாக விஜய்யின் 68 ஆவது படம் பற்றி தனது x வலைதளபக்கத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘Welcome to the future’ என குறிப்பிட்டுள்ளார் அவர். இப்பதிவில், விஜய்யின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் வெங்கட்பிரபு.
Thalapathy 68 படத்திற்கான 3D ஸ்கேனிங் மற்றும் vfx பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் USC Institute for creative Technologies நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முன் Avatar, Blade Runner 2049, Maleficent, Fast and Furious, The Jungle Book, Ready Player One போன்ற படங்களின் vfxல் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு முறை ஆஸ்கர் விருதினையும் இந்நிறுவனம் வென்றுள்ளது. இதனால் தளபதி 68 மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.