இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்
இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்புதிய தலைமுறை

Indian 2 | Turbo | Andhagan | மின்மினி | கவுண்டம்பாளையம்.. இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

1. Gyaarah Gyaarah (Hindi) Zee5 - Aug 9

Gyaarah Gyaarah
Gyaarah Gyaarah Zee5

உமேஷ் இயக்கியிருக்கும் சீரிஸ் `Gyaarah Gyaarah'. 1990, 2001, 2016 ஆகிய வருடங்களில் நடந்த சம்பவங்களும், அதில் உள்ள மர்மங்களுமே கதை.

2. Django (English) Lionsgate Play - Aug 9

Django
DjangoLionsgate Play

Francesca Comencini இயக்கியுள்ள சீரிஸ் `Django’. 1966ல் படமாக வெளியான இதனை தற்போது சீரிஸாக மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். ஜாங்கோ தன் மகளைத் தேடும் படலமே கதை.

இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்
அவெஞ்சர்ஸ் VFX கலைஞர்களின் கைவண்ணத்தில் The GOAT!

3. Phir Aayi Hasseen Dillruba (Hindi) Netflix - Aug 9

Phir Aayi Hasseen Dillruba
Phir Aayi Hasseen DillrubaNetflix

ஜெய்ப்ரத் இயக்கியிருக்கும் படம் `Phir Aayi Hasseen Dillruba'. 2021ல் வெளியான `Hasseen Dillruba’ படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது. ராணி என்ற பெண் இம்முறை என்ன சிக்கலில் மாட்டுகிறார், எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

4. Ghudchadi (Hindi) Jio Cinema - Aug 9

Ghudchadi
GhudchadiJio Cinema

பினோய் இயக்கத்தில் சஞ்சய் தத் - ரவீணா டான்டன் நடித்துள்ள படம் `Ghudchadi’. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுக்கும் கமல்ஹாசன்... அடுத்த தொகுப்பாளர் யாராக இருக்கும்?

5. Lisa Frankenstein (English) Jio Cinema - Aug 9

Lisa Frankenstein
Lisa FrankensteinJio Cinema

Zelda Williams இயக்கியுள்ள படம் `Lisa Frankenstein'. பதின்பருவப் பெண்ணான லிசா மற்றும் அவளுக்கு ஒரு நபர் மேல் வரும் ஈர்ப்பும் தான் கதை. அந்த நபர் யார் என்பதும், அவருக்காக லிசா செய்யும் வேலைகளும் மீதிக் கதை.

6. The Instigators (English) Apple TV+ - Aug 9

Apple TV+
Apple TV+

The Bourne Identity, Mr. & Mrs. Smith, Jumper, Edge of Tomorrow படங்களை இயக்கிய Doug Liman தற்போது இயக்கியுள்ள படம் `The Instigators’. இரண்டு கொள்ளையர்களின் திட்டமும், அதை செயல்படுத்துவதும் தான் கதை.

7. Love Li (Kannada) Prime - Aug 7

Love Li
Love LiPrime

சேத்தன் கேசவ் இயக்கிய படம் `Love Li’. கேங்ஸ்டராக வளரும் ஒருவனுக்கு கிடைக்கும் காதல், அதன் பின் வரும் சிக்கல் இவையே கதை.

8. The Color Purple (English) Jio Cinema - Aug 8

The Color Purple
The Color PurpleJio Cinema

Blitz Bazawule இயக்கிய படம் `The Color Purple'. 1909 -1947 காலகட்டங்களில் ஜார்ஜியாவின் சிறு நகரத்தில், ஆஃப்ரிக்க அமெரிக்க பெண்கள் படும் அவதிகளை பதிவு செய்யும் படம்.

9. Indian 2 (Tamil) Netflix - Aug 9

Indian 2
Indian 2 netflix

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் `இந்தியன் 2’. சேனாபதி கம்பேக் கொடுத்து, இம்முறை எதை சரிசெய்கிறார் என்பதே கதை.

இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்
தமிழ் சினிமாவை அதகளம் செய்த ராயன்.. மகாராஜா, இந்தியன் 2 வை பின்னுக்குத்தள்ளி சாதனை.. இத்தனை கோடிகளா?

10. 7/G (Tamil) Netflix - Aug 9

7/G
7/GNetflix

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடித்த படம் `7/G'. ராஜீவ், வர்ஷா தம்பதி தங்கள் மகனுடன் புது வீட்டுக்கு குடியேறுகிறார்கள். ஆனால் அங்கு அமானுஷ்யமான விஷயங்கள் நடக்க, அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

11. Golam (Malayalam) Prime - Aug 9

Golam
Golam Prime

சம்ஜத் இயக்கத்தில் உருவான படம் `Golam’. மர்மமான கொலை ஒன்றை விசாரிப்பதே கதை.

12. Nadanna Sambhavam (Malayalam) manoramaMAX - Aug 9

Nadanna Sambhavam
Nadanna SambhavamManoramaMax

விஷ்ணு நாரயணன் இயக்கத்தில் பிஜூ மேனன், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த படம் `Nadanna Sambhavam’. அப்பார்ட்மெண்ட் குடியிருப்புக்குள், ஒரு புது நபரின் வருகை என்ன மாதிரி விளைவுகளை கொண்டு வருகிறது என்பதே கதை.

13. Turbo (Malayalam) SonyLIV - Aug 9

Turbo
TurboSonyliv

`புலிமுருகன்' புகழ் வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம் `Turbo’. டர்போ ஜோஷ் என்பவர் எதிர்பாராத விதமாக வெற்றிவேல் என்ற கேங்ஸ்டருடன் மோதும் சூழல் உருவாகிறது. அதன் பின் நடக்கும் ஆக்‌ஷனே படம்.

14. Chandu Champion (Hindi) Prime - Aug 9

Chandu Champion
Chandu ChampionPrime

கபீர் கான் இயக்கத்தில் உருவான படம் `Chandu Champion’. ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கப் போராடியவரின் கதை.

15. Andhagan (Tamil) - Aug 9

Andhagan
Andhagan

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள படம் `அந்தகன்’. இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக். ஒரு இசைக்கலைஞர் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

16. Minmini (Tamil) - Aug 9

Minmini
Minmini

ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள படம் `மின்மினி’. பள்ளிப் பருவத்தில் நடக்கும் இழப்பினால் சோர்வான ஒருவன், அதே பருவத்தில் தான் உயிர்பிழைத்து வந்த பெண் இந்த இருவரின் பயணமும் எப்படி இணைகிறது என்பதே கதை.

17. Kavundampalayam (Tamil) - Aug 9

Kavundampalayam
Kavundampalayam

ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள படம் `கவுண்டம்பாளையம்’. பழனிச்சாமி, தன் மகள் காதலில் விழுந்த பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.

18. Veerayi Makkal (Tamil) - Aug 9

Veerayi Makkal
Veerayi Makkal

நாகராஜ் இயக்கியுள்ள படம் `வீராயி மக்கள்’. ஒரு இழப்பிற்கு பிறகு குடும்பமே பிரிகிறது, அதன் பின் அது இணைந்ததா இல்லையா என்பதே கதை.

19. Light House (Tamil) - Aug 9

Light House
Light House

ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள படம் `லைட் ஹவுஸ்’. தன் இணையை இழந்த ஒருவர் பழிவாங்க கிளம்புவதே கதை.

20. Park (Tamil) - Aug 9

Park
Park

முருகன் இயக்கியுள்ள படம் `பார்க்’. பார்க் ஒன்றில் அமானுஷ்ய ஆவி உலவுவது தெரியாமல், அதற்குள் நுழையும் சிலரின் கதை.

21. Sooriyanum Sooriyagandhiyum (Tamil) - Aug 9

Sooriyanum Sooriyagandhiyum
Sooriyanum Sooriyagandhiyum

ராஜா இயக்கியுள்ள படம் `சூரியனும் சூரியகாந்தியும்’. ஒரு காதலும், அதைத் தொடர்ந்து நிகழும் பிரச்சனைகளுமே கதை.

22. P2 (Tamil) - Aug 9

P2
P2

சிவம் இயக்கியுள்ள படம் `P2'. ஒரு ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது.

23. Adios Amigo (Malayalam) - Aug 9

Adios Amigo
Adios Amigo

ஆசிஃப் அலி, சுராஜ் நடித்துள்ள படம் `Adios Amigo'. பேருந்து நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் இருவர் நண்பர்களாகின்றனர். அதன் பின் அவர்கள் வாழ்வில் நடப்பவையே கதை.

24. Bheema (Kannada) - Aug 9

Bheema
Bheema

துனியா விஜய் இயக்கி நடித்துள்ள படம் `Bheema'. எதிரிகளால் எல்லாவற்றையும் இழந்த பீமா, அவர்களை வேட்டையாடக் கிளம்பும் ரிவெஞ் கதை.

25. Ghuspaithiya (Hindi) - Aug 9

Ghuspaithiya
Ghuspaithiya

சுசி கணேசன் இயக்கியுள்ள படம் `Ghuspaithiya’. 2017ல் அவர் தமிழில் இயக்கி வெளியான `திருடுப் பயலே 2’ படத்தின் இந்தி ரீமேக் தான் இது. ஊரில் உள்ள முக்கியப் புள்ளிகளின் ரகசியங்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் ஹீரோவுக்கு, ஒரு பர்சனல் பிரச்சனை வருகிறது. அதை அவர் எப்படி கையாள்கிறார் என்பதே கதை.

26. Borderlands (English) - Aug 9

Borderlands
Borderlands

Hostel, Knock Knock படங்களை இயக்கிய Eli Roth தற்போது இயக்கியுள்ள படம் `Borderlands’. பெண் ஒருவரைக் காப்பாற்ற கிளம்பும் ஒரு குழுவின் அட்வென்சர் பயணமே கதை.

27. It Ends with Us (English) - Aug 9

It Ends with Us
It Ends with Us

Justin Baldoni இயக்கியுள்ள படம் `It Ends with Us’. லில்லி தன் மோசமான நினைவுகளைக் கடந்து புது வாழ்க்கையை துவங்குகிறார். அப்போது அவர் வாழ்வில் வரும் ஒரு நபர், அவளது பெற்றோரை நினைவுபடுத்துவது போல் அமைய, அதன் பின் நடப்பவையே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com