ஒரு சொல் வெல்லும்... ஒரு சொல் கொல்லும் என்ற பழமொழி உண்டு... அப்படி, நடிகை நயன்தாரா இன்ஸ்டாவில் உதிர்த்த கண்டன சொற்களுக்காக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், நடிகர் தனுஷ். என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...
நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் திருமண வாழ்க்கையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படமாக தயாரித்துள்ளது. நயன்தாரா BEYOND THE FAIRY TALE எனும் தலைப்பில் உருவான இந்த ஆவணப்படம், வரும் 18ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில், தனுஷுக்கு எதிரான இஸ்டாவில் பதிவு ஒன்றை இட்டுள்ள நயன்தாரா, புயலை கிளப்பியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படம் தனுஷின் தயாரிப்பில் உருவானது. அந்த படத்தில் இருந்து 3 நொடி காட்சியை ஆவணப்படமான நயன்தாரா BEYOND THE FAIRY TALE-ல் பயன்படுத்த, தயாரிப்பாளரான தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார் நயன்தாரா.
தனுஷின் பழிவாங்கல் நடவடிக்கையால், தானும் தன் கணவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். நயன்தாராவின் நேரடி குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயனின் மேடைப் பேச்சும் இதே சூழலை உருவாக்கியது.
கொட்டுக்காளி பட விழா கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. அப்போது, மேடையேறிய சிவகார்த்திகேயன், மொத்தம் 17 நிமிடங்கள் பேசினார். தனது பேச்சை நிறைவு செய்த கடைசி நிமிடங்களில், அவர் வைத்த TWIST-தான், இணையத்தில் வைரலாகிவிட்டது.... "இவங்கள நான்தான் கண்டுபிடிச்சி வாழ்க்கை குடுத்தேன்னு சொல்லமாட்டேன்... ஏன்னா? எனக்கு வாழ்க்கை குடுத்தேன்னு சிலர் சொல்லி பழக்கிட்டாங்க... அப்படிபட்ட ஆள் நான் இல்லை" என வருத்தம் கலந்த புன்னகையோடு, சொல்ல வந்த கருத்தை சரியாக பதிவு செய்துவிட்டு, அடுத்த TOPIC-க்கு நகர்ந்துவிட்டார். அப்படி சிவகார்த்திகேயன் பேசிய 17 நிமிட பேச்சில், அந்த 15 நொடிகள் HIGHLIGHT ஆகிவிட்டது.
சிவகார்த்திகேயன் யாரை குறிப்பிடுகிறார்? அவர் பேசியதன் நோக்கம் என்ன? என பல கேள்விகள் இணையத்தில் எழுப்பப்பட்டன... அந்த உரையாடலில் அதிகம் அடிபட்ட பெயர் தனுஷ்..
சிவகார்த்திகேயன் பொடி வைத்து பேசினால், அதில் தனுஷின் பெயர் அடிபடுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.. இதற்கு ஒரு பின்னணி கதை உண்டு.
சினிமாவில் சிவகார்த்திகேயன் வெற்றிகளை குவிக்கத் தொடங்கிய காலத்தில், தனுஷ் சில தோல்விகளையும் சந்திக்கத் தொடங்கினார்.. அப்போது, தனுஷை, சிவகார்த்திகேயன் OVERTAKE செய்துவிட்டார் என்ற கருத்து பேசுபொருளானது...
இப்படியான சூழலில் தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே விரிசல் விழுந்ததாக கூறப்படுகிறது. கொட்டுக்காளி மேடையில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டு பேசியது தனுஷைதான் என ஊகங்கள் எழுந்த நிலையில், நயன்தாராவின் நேரடி குற்றச்சாட்டு அதை உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.