4 வருடங்களுக்கு பின் இமயமலைக்கு செல்லும் ரஜினி!

“படம் எப்படி உள்ளது என்று நீங்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும்” - ரஜினி

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் - ரஜினி
ஜெயிலர் - ரஜினிTwitter

இப்படம் நாளை (ஆகஸ்ட் 10- ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. டிக்கெட் முன்பதிவுகளும் களைகட்டியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினி இமயமலைக்கு செல்ல உள்ளார். கொரோனா தொற்று, உடல்நல பாதிப்பு போன்ற காரணங்களால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வெகு காலமாக ரஜினி இமயமலை பயணத்தை தவிர்திருந்தார். தற்போது அனைத்தும் இயல்புக்கு திரும்பியதையடுத்து, 4 வருடங்கள் கழித்து இமயமலைக்கு செல்கிறார் ரஜினி.

ரஜினி - இமயமலை
ரஜினி - இமயமலைTwitter

இதுகுறித்து இன்று காலை சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சங்தித்து பேசினார். அப்போது ”ரொம்ப நாளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன். கொரோனா காரணமாக 4 வருடமாக இமயமலைக்கு செல்ல முடியவில்லை. நாளை ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. படம் எப்படி உள்ளது என்று நீங்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும். பார்த்து சொல்லுங்கள்!” என்றார்.

- Jenetta Roseline S

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com