பாரதியார் கவிதையுடன் வெளியான KH234 போஸ்டர்..! இதான் ஸ்பெஷலா?

நடிகர் கமல்ஹாசனின் KH234 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் இன்று காலை வெளியான நிலையில், அப்போஸ்டரின் மிரர் இமேஜில் பாரதியாரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
KH234
KH234 புதிய தலைமுறை
Published on

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற திரைப்படம், நாயகன். இதையடுத்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் இணைந்து தற்போது உருவாகிறது KH 234. ஏ.ஆர்.ரஹ்குமான் இசையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

KH234
2 பாகங்களாக வரப்போகிறது இந்தியன் 2? வில்லன் இவர்தானா? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன்
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன்முகநூல்

இப்படத்திற்கு தற்காலிகமாக KH 234 என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி தலைப்பு என்ன என்பது குறித்தும் இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. KH234 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதன் ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பின்னணியில் இருக்கும் வரிகளும் கவனம் பெற்றுவருகின்றன.

போஸ்டரில் கொஞ்சம் விஸ்வரூபம் சாயல் தென்பட்டாலும், சில வார்த்தைகள் அப்படியே தமிழில் எழுதி mirror இமேஜ் செய்தது போல் இருந்ததால், அதைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்த போது, பாரதியாரின் காலனுக்கு உரைத்தல் கவிதை வரிகளைத்தான் அந்த போஸ்டர் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

காலனுக்கு உரைத்தல்:

பாரதியாரின் காலனுக்கு உரைத்தல் கவிதைதான் என்ன தெரியுமா?

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்

காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)

காலனுக்கு உரைத்தல்:
காலனுக்கு உரைத்தல்:முகநூல்

சரணங்கள்

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல

வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்

முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன

தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி

நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)*

- இதுவே பாரதியாரின் காலனுக்கு உரைத்தல் கவிதையின் வரிகள்.

இதன் மூலம் இப்படத்தில் காலனுக்கு ஏதோ மறைமுகமாக கூறுகிறார்கள் என்றுதான் அர்த்தம் பட வேண்டும். தலைப்பு வந்தபின் அதிலும் ஏதும் இப்படி குறியீடு உள்ளதா என பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com