நடிகை நயன்தாரா கடந்த 16-ம் தேதி மூன்று பக்கத்திற்கு வெளியிட்ட அறிக்கையில், son of kasthuri raja, brother of selvaragavan என்று தனுஷை குறிப்பிட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. தனுஷ் ரசிகர்கள் உட்பட பலரும், “நயன்தாரா மட்டும்தான் சினிமாவில் கஷ்டப்பட்டு வந்தாரா, தனுஷ்க்கு சினிமா பின்புலம் இருந்தாலும், பல அவமானங்கள், தோல்வியை கடந்துதான் வந்துள்ளார். அவரை எப்படி நெப்போட்டிசத்தில் சேர்க்க முடியும்?” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே நவம்பர் 18 அன்று நயன்தாராவின் ஆவணப்படமும் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் இதுவரை, நயன்தாராவின் இந்த கடிதம் தொடர்பாக தனுஷ் தரப்பு எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இதற்கிடையேதான், தனது மகன் தனுஷ் மீதான விமர்சனம் குறித்து பதிலளித்துள்ளார் கஸ்தூரி ராஜா. தனியார் ஆங்கில ஊடகத்திடம் பேசிய அவர், “எங்களுக்கு வேலைதான் முக்கியம். முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் எங்களுக்கு, பின்னால் துரத்தி வருபவர்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை. பின்னால் பேசுபவர்களுக்கு பதில் சொல்லவும் நேரமில்லை.
என்னைப் போலவே எனது மகனும் பட வேலைகளில்தான் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷிடம் NOC கேட்டு நயன்தாரா இரண்டு வருடமாக காத்திருந்ததாக கூறுவதெல்லாம் உண்மையல்ல. இது பற்றி பேச விருப்பமில்லை” என்று பதிலளித்துள்ளார். இந்த விஷயத்தில் பதில் சொல்லாமல் இருந்து வரும் தனுஷ், தான் இயக்கிவரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் தொடர்பான அப்டேட்டையும், ரஃபேல் நடாலின் ஓய்வு அறிவிப்பு குறித்தும் ட்வீட் போட்டு வருகிறார்.
ஆக, இந்த விவகாரத்தில் தனுஷ் தரப்பு மிகவும் Cool-ஆகவே இருந்து வருவதாக பேசி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.