“கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை...”- அஜித்தை தொடர்ந்து கமல் எடுத்த திடீர் முடிவு!

இனிமேல் தன்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்முகநூல்
Published on

“இனிமேல் என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்” என்று நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். அதில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ராஷ்டிரபதி பவன் விருதும் பெற்றார் அவர். அன்று தொடங்கிய அவரின் திரைப்பயணம், தற்போது அவரது 70வது வயதிலும் நிற்காமல் நீடிக்கிறது. அந்தவகையில் பல்வேறு அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்து, சினிமாதான் தனது உலகம் என்பதை நிரூபிக்கும் விதமாக, எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி சரித்திர நாயகனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் கமல்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

வெற்றியானாலும், தோல்வியானாலும் தன் படைப்புகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் மூலம், கலைத்துறையின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு ‘உலக நாயகன்’ என்ற பட்டம் அவரின் ரசிகர்களால் 10 - 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில்தான், “சினிமாக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான். எனவே, என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்” என திரைத்துறையினர், ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு தற்போது கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்தான பதிவில், “உயிரே உறவே தமிழே, வணக்கம். என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.

உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது.

திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. கொண்டு அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.

கமல்ஹாசன்
“தன் சொந்த மக்களுக்கு செய்கிற துரோகம்” - ‘அமரன்’ செய்த தவறு? இயக்குநர் கோபி நயினார் ஆதங்கம்!

மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

கமல்ஹாசன் அறிக்கை
கமல்ஹாசன் அறிக்கை

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்
டெல்லி கணேஷ் மறைவு | “எதார்த்தமான அவரின் நடிப்பையும் அன்பையும் இழந்து விட்டேன்” - நடிகர் வடிவேலு!

முன்னதாக, நடிகர் அஜித்தும் தன்னை யாரும் ’தல’ என்று அழைக்கவேண்டாம், ஏகே அல்லது அஜித் என்று அழைத்தாலே போதுமானது என்று தெரிவித்திருந்த சூழலில், தற்போது நடிகர் கமல்ஹாசனும் தன்னை ‘உலக நாயகன்’ என்று அழைக்க வேண்டாம் என்று தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com