லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67-வது படமாக உருவாகி வருகிறது ‘லியோ’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளதால், ‘லியோ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய்யின் 68-வது படம் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் இப் படத்தை தயாரிக்கிறது. விஜய்யின் ‘பிகில்’ படத்திற்குப் பிறகு அந்நிறுவனம் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெங்கட் பிரபு படத்துக்குப் பின்னர், அடுத்து எந்த இயக்குநரின் படத்தையும் புக் செய்யாமல் அமைதியைக் கடைபிடித்து வருகிறாராம் விஜய். அவரின் 68-வது படத்துக்கு சம்பளமாக 200 கோடி என சொல்லப்பட்ட போதும், அடுத்தடுத்த படங்கள் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு காரணம் என்னவெனில், தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தது உள்பட பெரிய திட்டங்களை மனதில் வைத்துத்தான் அவர் இப்படி செயல்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
அந்தவகையில், வெங்கட் பிரபு படத்துக்குப் பின்னர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொள்ளவிருக்கிறாராம் விஜய். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு சில காய்களை நகர்த்திப் பார்க்கவும் அவர் முடிவெடித்துள்ளாராம். அவருக்கு நெருக்கமான அரசியல் சாணிக்கயர்களும், ‘நீங்கள் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தினால் சினிமாவைப் போலவே அரசியலிலும் நம்பர் 1 ஆக வர முடியும்’ என ஆருடம் சொல்லியிருக்கிறார்களாம். அதன் அடிப்படையிலேயே இந்த திட்டமிட்ட ரிஸ்க்கை எடுக்க விஜய் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.