‘வேற... வேற... வேற லெவல் அப்டேட்!’ - வினோத் இயக்கத்தில் விஜய்... வெளியானது தளபதி 69 அப்டேட்!

இயக்குநர் ஹெச். வினோத் விஜய்யின் அடுத்த படத்தினை இயக்கப்போவதை உறுதி செய்துள்ளார்.
H Vinoth - Vijay
H Vinoth - Vijayபுதிய தலைமுறை
Published on

லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ளார். இதற்கு THE GREATEST OF ALL TIME எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். புதிய கீதைக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய்யுடன் இணைந்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

The Greatest of all Time Movie
The Greatest of all Time Movie

விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

H Vinoth - Vijay
"எங்க விஜய் அண்ணாவ என்னயா பண்ணி வச்சிருக்கீங்க?" - 'GOAT' பட கெட்டப்பிற்கு எழும் கடுமையான விமர்சனம்!

THE GREATEST OF ALL TIME-தான், விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான அப்டேட் இன்னும் மாஸாக வந்துள்ளது. ஹெச் வினோத் கடைசியாய் துணிவு திரைப்படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

h vinoth
h vinoth

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத் விஜய்யின் அடுத்த படத்தினை இயக்கப்போவதை உறுதி செய்துள்ளார். இந்த படம் அரசியல் பேசாது என்றும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

H Vinoth - Vijay
‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது இவர்தானா? தீயாய் பரவும் தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com