வாழை: “ஆயிரம் வாழைத்தார்களை இதயத்தில் ஏற்றிவிட்டது அந்தக் காட்சி” - நெகிழ்ந்த முதலமைச்சர்!

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை பேசும் வகையில் வாழை படம் இருப்பதாக கூறி, அப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
வாழை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்pt web
Published on

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை பேசும் வகையில் வாழை திரைப்படம் இருப்பதாக, அப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழை படம்
வாழை படம்புதிய தலைமுறை

இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

வாழை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
Vaazhai review | வாழை விமர்சனம் | மாரியின் நினைவிலிருந்து ஒரு வலி மிகு காவியம்!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என்றுள்ளார்.

இதை ரீ-ட்வீட் செய்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், “என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” என்று பதில் கூறி நெகிழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com