மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘கார்கி’ இந்திரன்ஸ் கலியபெருமாளாக காளி வெங்கட்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘கார்கி’ திரைப்படத்தில் ‘காளி வெங்கட்’ ஏற்று நடித்திருந்த ’இந்திரன்ஸ் கலியபெருமாள்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
காளி வெங்கட்
காளி வெங்கட்கார்கி திரைப்படம்
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் சினிமாவில் பரவலாக கவனிக்கப்பட்ட திறமையான பழைய  துணை நடிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி, சமகாலத்திலும் திறமையான சில நடிகர்கள் பிரகாசித்தபடி இருக்கிறார்கள். அவர்களின் நடிப்பை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், நினைவில் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. சமகாலத்திய சிறந்த துணைநடிகர்களில் ஒருவர் காளி வெங்கட். படத்திற்குப் படம் அவருக்கான நடிப்பும் வித்தியாசமும் கூடியபடியே இருக்கிறது. 

காளி வெங்கட்
காளி வெங்கட்

காளி வெங்கட் தமிழ் சினிமாவுக்குள் எப்படி வந்தார்? 

ஏறத்தாழ பெரும்பாலான நடிகர்கள் சினிமாவிற்கு வந்த பின்னணியைப் போலவேதான் இருக்கிறது, அவரது கதையும். கோவில்பட்டி அருகே ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட். சிறுவயது முதலே நாடகங்களில் நடித்ததால், நடிப்பு என்னும் பித்து மூளைக்குள் குடிபுகுந்து விட்டது. 

காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| ’மலர்விழி’ ஆக ’இறைவி’-ல் மின்னலென வெட்டிச் சென்ற பூஜா தேவரியா!

ஆகவே சினிமா ஆசை பிடித்த பெரும்பாலோனோர் செய்யும் அதே விஷயத்தைத்தான் வெங்கட்டும் செய்தார். ஆம், சென்னைக்கு ஓடி வந்து பல உதிரி வேலைகளைச் செய்து லோல்பட்டு ‘சினிமாவில் நுழைய யாரை அணுகுவது?’ என்று தெரியாமல் பல இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். 

இந்த நிலையில் விஜய பிரபாகரன் என்கிற டைரக்டரின் அறிமுகம் கிடைக்கிறது. ‘தசையினை தீச்சுடினும்’ என்கிற படத்தில் ஒரு முக்கியமான வேடத்தைத் தருகிறார் இயக்குநர். ஆனால் படம் வெளியாகவில்லை. என்றாலும் அதில் ஏற்றிருந்த ‘காளி’ என்கிற பாத்திரம் சிறப்பாக இருக்கவே அதையே தன்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டு ‘காளி வெங்கட்டாக’ மாறினார்.

காளி வெங்கட்
காளி வெங்கட்

இதன் பிறகு சில குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ‘முண்டாசுப்பட்டி’ என்கிற குறும்படம் காளி வெங்கட்டிற்கு ஒரு தனித்த கவனத்தை ஏற்படுத்தித் தருகிறது. பின்பு இந்தக் குறும்படமே சினிமாவாகவும் ஆகிறது. ‘தடையறத் தாக்க’ போன்ற சில படங்களில் வாய்ப்பு தொடர்ந்தாலும் ‘தெகிடி’ திரைப்படம் பரவலான ரசிகர்களைப் காளி வெங்கட்டிற்கு பெற்றுத் தருகிறது. அதன் பிறகு மெல்ல மெல்ல உயர்ந்து பார்த்தாலே அடையாளம் தெரியுமளவிற்கான நடிகராக மாறினார்.

காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | அபூர்வ ராகங்கள் | கே.பி-யின் ‘ஜென்டில்மேன்’ ரஜினிகாந்த்!

ஸ்பெஷலாக அமைந்து விடும் சிறிய பாத்திரங்கள்

காளி வெங்கட்’ துணை நடிகராக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவற்றுள ஒரு சில திரைப்படங்கள், ‘ஸ்பெஷல்’ கவனத்தைப் பெற்று விடும். அப்படி அமைந்த படங்களில் ஒன்றாக ‘கார்கி’யைச் சொல்லலாம். இந்தத் திரைப்படத்தில் காளி வெங்கட்டின் பாத்திரம், ஒரு ஜூனியர் அட்வகேட். வழக்கறிஞர் பாத்திரம் என்றதும் ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்று நீதிமன்றத்தில் ஆவேசமாக முழங்கும் பாத்திரம் கிடையாது. 

காளி வெங்கட்
காளி வெங்கட்

இந்திரன்ஸ் கலியபெருமாள் (காளி வெங்கட்டின் பாத்திரப் பெயர்) ஒரு வழக்கில் கூட வாதாடியது இல்லை. அவருக்கு அனுபவம் இல்லாதது மட்டுமல்ல, திக்கித் திக்கிப் பேசுபவர். யார் அவரிடம் கேஸ் தருவார்கள்? இது சார்ந்த பின்னடைவுகள் காரணமாக ஒரு பிரபலமான வக்கீலிடம் பெயருக்கு உதவியாளராக இருக்கிறார். போதாக்குறைக்கு மாலை நேரத்தில் மெடிக்கல் ஷாப்பிலும் பணி புரிகிறார். (இந்த விஷயம் திரைக்கதையில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது). 

இது போன்ற சூழலை சிலபல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஒட்டுமொத்த ஊரே கவனிக்கும் ஒரு பிரபலமான வழக்காக அது இருக்கும். மக்களிடம் மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தும் குற்றம் அதில் சம்பந்தப்பட்டிருக்கும். அந்த வழக்கை எடுத்து நடத்த பிரபல வழக்கறிஞர்களே தயங்குவார்கள். நிச்சயம் தோல்விதான் என்கிற அளவிற்கு சாட்சிகளும் தடயங்களும் வலுவாக இருக்கும். காவல்துறையினரும் அரசு வழக்கறிஞரும் மிகையான தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். 

காளி வெங்கட்
காளி வெங்கட்கார்கி திரைப்படம்

இப்படியொரு சூழலில் ஒரு சாதாரண ஆசாமி அந்த கேஸிற்குள் வருவார். ‘இவரால என்னப்பா செய்து விட முடியம்?’ என்று அலட்சியமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சின்ன உளியால் மெல்ல மெல்ல முயற்சித்து ஒரு பெரிய மலையை உடைத்து விடுவது போல வெற்றியை நோக்கி நகர்வார். இது போன்ற முரண் திரைக்கதைக்கு நிச்சயம் சுவாரசியத்தைத் தரும். இந்த டெம்ப்ளேட் ‘கார்கி’ திரைக்கதையில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘கேளடி கண்மணி’ ஜனகராஜ் | “ஒரு கனவு மட்டும் பலிக்கலை...”

கருணையும் திறமையும் கொண்ட ஜூனியர் வக்கீல்

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள் கார்கி. ஒரு தனியார் பள்ளியில் டீச்சர் வேலை. வீட்டில் தயார் செய்த இட்லி மாவு வியாபாரம் செய்கிறார் அம்மா. அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டி வேலை செய்கிறார், வயதான அப்பா.  பள்ளியில் படிக்கும் ஒரு தங்கை. இப்படி ஒரு டிபிக்கலான மிடில் கிளாஸ் வாழ்க்கையின் சிக்கல்கள் மற்றும் சின்னச் சின்ன இன்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் கார்கியின் வாழ்வில் இடிபோல் இறங்குகிறது அந்தத் தகவல். 

கார்கி திரைப்படம்
கார்கி திரைப்படம்

அவரது அப்பாவை ஒரு போக்ஸோ வழக்கில் போலீஸ் கைது செய்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் கூட அல்ல. வலுவான சாட்சியங்கள் இருக்கின்றன. ஆனால் கார்கிக்கு தன்னுடைய அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரியும் என நினைத்து, அவர் ஓர் அப்பாவியான மனிதர் என நம்புகிறார். இளம் வயதில் கார்கி பாலியல் சீண்டலால் பாதிக்கப்படும் போது அதை எப்படி துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவரே, அப்பாதான் என்பதால், அவர் நிச்சயம் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்கிறார்.

காளி வெங்கட்
பாலியல் குற்றவாளிகளுக்கு தமிழ் சினிமா கொடுத்த தண்டனைகள்... அன்றும் இன்றும்! #Rewind

‘அபாண்டமாக’ குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த வழக்கிலிருந்து தனது அப்பாவை மீட்பதற்காக கார்கி போராட ஆரம்பிக்கிறாள். ஆனால் அனைத்துச் சூழல்களும் அவளுக்கு எதிராக இருக்கின்றன. ‘குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கு’ என்று பொதுமக்களும் அமைப்புகளும் போராட்டம் நடத்துகின்றன. போதாக்குறைக்கு மீடியாக்களும் இந்த வழக்கை விதம் விதமான கோணங்களில் ஆராய்ச்சி செய்து பரபரப்பை ஏற்படுத்துகின்றன. வலுவான சாட்சியம் இருப்பதால் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவதில் காவல்துறையினர்  உறுதியாக செயல்படுகின்றனர். “அவருக்குத் தண்டனை கன்ஃபர்ம். நீங்க ஊரை விட்டு போயிடுங்க” என்று கார்கிக்கு மிரட்டல் தொனியில் அட்வைஸ் செய்கிறார்கள். 

சாய் பல்லவி
சாய் பல்லவிகார்கி திரைப்படம்

கார்கியின் குடும்ப நண்பரும் பிரபல வழக்கறிஞருமாகவும் இருக்கிறவர், இந்த வழக்கின் ஆரம்பக் கட்டத்திலேயே விலகி விடுகிறார். ஒரு சிறுமியின் மீது நடந்த கூட்டுப் பாலியல் குற்றம் என்பதால் வழக்கறிஞர்கள் சங்கம் இந்த வழக்கில் ஆஜராக அவருக்குத் தடை விதிக்கிறது. “அதை மீறி என்னால ஒண்ணும் செய்ய முடியாதும்மா” என்று சுயநலத்துடன் கைகழுவி விடுகிறார் அந்த சீனியர் லாயர். 

காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

இருக்கிற ஒரே நம்பிக்கையும் போய் விடுகிற நிலையில் ஒரு சாதாரண பெண்ணான கார்கி என்னதான் செய்வாள்? வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் போது பற்றிக் கொள்ளக் கிடைக்கிற சிறு மரக்கட்டை போல, அவளுக்கு ஆதரவாக வந்து சேர்பவர்தான் இந்திரன்ஸ் கலியபெருமாள் என்னும் ஒரு சாதாரண ஜூனியர் வக்கீல். 

‘வக்கீல்தான். ஆனால் பார்ட்-டைமில் மெடிக்கல் ஷாப் வேலை… 

சாய் பல்லவி  - காளி வெங்கட்
சாய் பல்லவி - காளி வெங்கட்கார்கி திரைப்படம்

கார்கிக்கும் இந்திரன்ஸிற்கும் இடையில் நடக்கும் முதல் சந்திப்பே அசந்தர்ப்பான சூழலில் சுவாரசியமாக அமைந்திருக்கிறது. தனது அப்பாவை எதற்காகவோ போலீஸ் அழைத்துச் சென்றிருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு பரபரப்பான நிலையில் காவல்நிலையத்திற்கு விரைகிறாள் கார்கி. அப்பா சர்க்கரை நோயாளி என்பதால் அது தொடர்பான மாத்திரையை வழியில் வாங்க வேண்டும். எனவே ஒரு மருந்துக்கடைக்குச் செல்கிறாள்

மருந்துக் கடையில் சாதாரண தோற்றத்தில் ஓர் ஆசாமி. பெயர் இந்திரன்ஸ். இவர் ஜூனியர் வக்கீலாக இருப்பவரும் கூட. தொலைக்காட்சி விவாதத்தில் தனது சீனியர் வக்கீல் பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பதை கொட்டாவியை மென்றபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்திரன்ஸ். ஆனால் அவர் அந்தக் காட்சியை மேம்போக்காக பார்ப்பதில்லை என்பது பின்னர் வரும் சூழலில் இருந்து தெரிகிறது. சீனியர் பயன்படுத்தும் சொற்றொடரை மிகச் சரியான சமயத்தில் பயன்படுத்துகிறார்.

சாய் பல்லவி  - காளி வெங்கட்
சாய் பல்லவி - காளி வெங்கட்கார்கி திரைப்படம்

அவரசத்துல கிளம்பிட்டேன். காசு கம்மியா இருக்கு. சுகர் மாத்திரை வேணும். நான் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்” என்று பதைபதைப்புடன் வந்து நிற்கும் கார்கியைப் பார்க்க அவருக்கு பாவமாக இருக்கிறது. ஆனால் வளவளவென்று வியாக்கியானம் தரும் இந்திரன்ஸை கார்கி அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. ஒருவர் கருணையைத் தர முன்வருகிறார். இன்னொருவருக்கு அது தேவைப்பட்டாலும் இவரது எளிய அணுகுமுறை காரணமாக தன்னிச்சையான அலட்சியத்தைக் காட்டுகிறார். இந்த முரண் படத்தில் படத்தில் தொடர்ச்சியாகவும் சுவாரசியமாகவும்  வெளிப்பட்டிருக்கிறது. 

காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 34 | உணர்ச்சிகரமான உயிர் நண்பன் ‘ரகு’வாக ‘சலங்கை ஒலி’ சரத்பாபு!

தனது அப்பா கைது செய்யப்பட்ட மறுநாள் நீதிமன்றத்திற்குச் செல்லும் கார்கியை இந்திரன்ஸ் நெருங்கி வந்து அணுக, ஏற்கெனவே பதைபதைப்பில் இருக்கும் கார்கி, இவரைத் தவறாகப் புரிந்து கொண்டு “நீங்க என்னை ஃபாலோ பண்றீங்களா.. உங்களுக்குத் தர வேண்டிய பணம்தானே.. இதோ இருக்கு” என்று சொன்னவுடன் “கார்கி மேடம்.. நான் சார் கிட்டதான் வொர்க் பண்றேன். அவர்தான் உங்களை பார்க்கச் சொன்னாரு” என்று இந்திரன்ஸ் சொல்ல “அட்வகேட்ஸ் யாரும் வரலையா?” என்று அவர் மீதான அவநம்பிக்கையுடன் கேட்கிறாள் கார்கி. “நானும் அட்வகேட்தான் மேடம்” என்று அடிபட்ட குரலில் சொல்கிறார் இந்திரன்ஸ்.

சாய் பல்லவி  - காளி வெங்கட்
சாய் பல்லவி - காளி வெங்கட்கார்கி திரைப்படம்

இக்கட்டான நேரத்தில் வெளிப்படும் கருணை

தன்னால் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது’ என்கிற தகவலை பாவனையான தயக்கத்துடன் சீனியர் லாயர் சொல்லும் காட்சியில் கார்கி மனம்  உடைந்து போகிறாள். அவளுக்கு தலைசுற்றிக் கொண்டு வருகிறது. “இப்ப நான் என்னதான் பண்ணணும்?” என்று பரிதாபமாக கேட்க, பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இந்திரன்ஸ் அவள் மீது கருணை கொண்டு “இந்த வழக்கை ஏற்று நடத்தலாமே?” என்று தயக்கத்துடன் சில பாயிண்ட்டுகளை தனது சீனியரிடம் கூறுகிறார். “கத்துக் கொடுக்கறவனுக்கே கத்துக் கொடுக்காத” என்று அவருடைய வாயை அடைத்து விடுகிறார் சீனியர். இந்தக் காட்சியில் கருணை, தயக்கம், அதையும் மீறிய சிறுதுணிச்சல் போன்ற முகபாவங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் காளி வெங்கட். 

உடைந்து போய் வெளியேறும் கார்கியின் பின்னாலேயே ஓடும் இந்திரன்ஸ், ‘ஒருவருக்கு இயலாத நிலையில் அரசாங்கமே இலவச வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்பதற்கான சட்ட விதியை மனப்பாடப்பகுதி போல் ஒப்பித்து ஆலோசனை சொல்லும் காட்சியில் காளி வெங்கட்டின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கிறது. 

காளி வெங்கட்
காளி வெங்கட்கார்கி திரைப்படம்

கார்கியின் வீட்டை இருள் சூழ்ந்திருக்கிறது. இரவு நேரத்தில் யாரோ கதவு தட்டுவதைப் பார்த்து திகைப்புடன் கதவைத் திறக்கிறாள் கார்கி. ஒரு சிறிய வெளிச்சம் போல செல்போன் டார்ச்சுடன் நிற்கும், இந்திரன்ஸ், தனது பின்னணியைப் பற்றிக் கூறி “உங்களுக்கு ஓகேன்னா.. இந்த கேஸை நான் எடுக்கறேன். வெறும் அஸிஸ்டெண்ட்தானேன்னு தயங்காதீங்க” என்று சொல்கிறார். வேறு வழியே இல்லாத கார்கி உடனே அதை ஒப்புக் கொள்கிறாள். பக்கத்திலுள்ள விஷமக்காரர்கள், கார்கி வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து விட்டிருக்கிறார்கள். இந்திரன்ஸ் அதை சரி செய்து விட்டு கிளம்புகிறார். இருளடைந்திருக்கும் வீட்டிற்குள் வெளிச்சம் பாய்வதை குறியீடு போல சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 33 | சூது கவ்வும் | ‘ஞானோதயம்’ பெறும் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர்

இதுவரையான காட்சிகளில் இயல்பாக பேசிக் கொண்டிருந்த இந்திரன்ஸ், இந்தக் காட்சியில் இருந்து திக்கித் திக்கி பேசுவதாக காட்டப்படுவது சற்று முரணாக இருக்கிறது. சரியாகப் பேசவே முடியாத ஒரு ஆசாமியால், எப்படி கோர்ட்டில் வாதாட முடியும் என்கிற தடையை ஏற்படுத்துவதற்காக, இயக்குநருக்கு பின்னால் உதித்த யோசனையாக இது இருக்கக்கூடும். 

சாய் பல்லவி  - காளி வெங்கட்
சாய் பல்லவி - காளி வெங்கட்கார்கி திரைப்படம்

தாழ்வுமனப்பான்மையை மீறிச்செல்லும் துணிச்சல்

இந்த வழக்கு தொடர்பாக பல ஆவணங்களைத் தேடியெடுத்து தீவிரமாக அலசி ஆராய்கிறார் இந்திரன்ஸ். நீதிமன்றத்தின் கழிப்பறையில் தனது சீனியரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

என்ன சொல்லி என் கிட்ட வேலைக்கு வந்தே.. இந்தக் கேஸ்ல நிச்சயம் நீ தோத்துடுவ.. PP உன் கண்ல விரலை விட்டு ஆட்டிடுவாரு.. கோர்ட்டிலயே மூத்திரம் கழிஞ்சுடுவே.. ஒரு ஸ்டேட்டே கவனிக்கிற இந்தக் கேஸ்ல நீ தோத்தப்புறம் உன் வாழ்க்கையே மொத்தமா போயிடும். எல்லாமே கையை விட்டுப் போயிடும்” என்று கோபத்துடன் சீனியர் எச்சரிக்கும் போது, கலங்கலான முகத்துடன் “போற அளவுக்கு என் கைல ஒண்ணும் இல்ல சார்” என்று சொல்லி விட்டுக் கிளம்பும் காட்சியில் காளி வெங்கட்டின் எக்ஸ்பிரஷன் அற்புதமாக இருக்கும்.

கார்கியின் தந்தையைப் பற்றிய பின்னணியை, கார்கியின் அம்மாவிடம் விசாரிக்கிறார் இந்திரன்ஸ். அதனால் எரிச்சல் அடையும் கார்கி, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. நீங்க எங்க சைட்ல நில்லுங்க.. அது போதும்.. இல்லைன்னா.. நீங்க கிளம்புங்க.. நான் பார்த்துக்கறேன்” என்று கோபத்தில் வெடிக்க “இல்லைங்க.. எல்லா ஆங்கிள்லயும் பார்க்கணும்ல” என்று மென்று முழுங்கி தயக்கமும் அதே சமயத்தில் சிறிய எரிச்சலும் கலந்து  சொல்கிறார் இந்திரன்ஸ். இந்த அசந்தர்ப்பமான நேரத்திலும், சாப்பிட முடியாமல் வைத்து விட்ட தோசையை “பார்சல் கட்டிக் கொடுத்துடுங்க” என்று கார்கியின் அம்மாவிடம் நைசாக ஜாடையில் கேட்கும் காட்சி சுவாரசியமானது. 

காளி வெங்கட்
காளி வெங்கட்கார்கி திரைப்படம்

இயல்பான நடிப்பைத் தந்திருக்கும் காளி வெங்கட்

நீதிமன்றக் காட்சிகளிலும் காளி வெங்கட்டின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கும். நோண்டி நுங்கெடுக்கும் அரசாங்க வழக்கறிஞரை திகிலுடன் பார்ப்பது, பேச முயலும் போது இயலாமல் தொண்டை அடைக்க வியர்த்து வழிவது, விழித்து விழித்துப் பார்ப்பது, என்றாலும் அவசியமான நேரத்தில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு வாதாடுவது, குறுக்கு விசாரணை செய்வது, அதில் சொதப்பல் நிகழ்ந்து நீதிபதி ஆட்சேபிக்கும் போது சோர்வுடன் சென்று அமர்வது, சாதகமாக நீதிபதி பேசும் போது நன்றியுடன் பார்ப்பது போன்ற முகபாவங்களில் அசத்தியிருக்கிறார் காளி வெங்கட். 

காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!

காவல்துறை ஏற்படுத்தும் தடைகளை மீறி, நீதிபதியிடம் முறையிட்டு கார்கியின் தந்தையை சிறையில் சந்தித்துப் பேசும் வாய்ப்பை எப்படியோ பெற்று விடுகிறார் இந்திரன்ஸ். குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பிலிருந்து வாக்குமூலத்தைப் பெற்றால்தான் இந்த வழக்கில் வெளிச்சம் கிடைக்கும் என்பதால் அது தொடர்பான விசாரணையை கார்கியின் தந்தையிடம் இந்திரன்ஸ் கறாராக முன்வைக்க, அதை ஆட்சேபிக்கிறாள் கார்கி. “என் வேலையைச் செய்ய விடுங்க” என்று இந்திரன்ஸ் தன்னிச்சையாக கோபப்படுவது சிறப்பான காட்சி. 

காளி வெங்கட்
காளி வெங்கட்கார்கி திரைப்படம்

வழக்கு விசாரணையின் போது  தனக்குச் சாதகமாக ஒரு பாயிண்ட் கிடைக்கும் சமயத்தில் (இங்குதான் இந்திரன்ஸின் மெடிக்கல் ஷாப் அனுபவம் பயன்படுகிறது), வக்கீல் கோர்ட்டை சரி செய்து கொண்டு தெம்பாக நடந்து வருவது, தன்னை அதுவரை கலாய்த்துக் கொண்டிருந்த அரசாங்க வழக்கறிஞருக்கு சரியான சொற்களில் திருப்பித் தருவது, ஒரு வீடியோ சாட்சியத்தை நீதிமன்றத்தில் சரியாகப் பயன்படுத்துவது, இறுதியில் கார்கியின் தந்தையை சிறையில் இருந்து மீட்டு வரும் காட்சியில் நிம்மதியும் வெற்றியும் கலந்த புன்னகையை வெளிப்படுத்துவது என்று பல தருணங்களில் காளி வெங்கட்டின் நடிப்பு மிகையில்லாமல் இயல்பான தொனியில் அமைந்துள்ளது.

ஒரு திறமையான வழக்கறிஞருக்கு உள்ள அனைத்துத் திறமைகளும் கொண்டவர்தான் இந்திரன்ஸ். ஆனால் திக்கிப் பேசும் குறை, எளிய தோற்றம், அனுபவமின்மை போன்ற காரணங்களால் தாழ்வுணர்வைக் கொண்டிருக்கிறார். கார்கி உட்பட, சுற்றியுள்ளவர்களும் அவரை குறைத்தே மதிப்பிடுகிறார்கள். ஆனால் அனைத்துத் தடைகளையும் மீறி தனது புத்திசாலித்தனம், சாதுர்யம், உழைப்பு போன்வற்றின் மூலம் இந்த அசாதாரண வழக்கை இந்திரன்ஸ் கையிலெடுத்துச் செல்வது, இந்தத் திரைப்படத்தின் சிறப்பான அம்சம். 

காளி வெங்கட்
காளி வெங்கட்கார்கி திரைப்படம்

பார்ப்பதற்கு அனுபவமற்றவர்கள் போல் தெரிந்தாலும், ஒரு பெரிய வழக்கில் வெற்றி பெற்று விடும் ஜீனியர் வக்கீல் பாத்திரத்தை தனது திறமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இந்தப் பாத்திரத்தை மறக்க முடியாத படிக்கு செய்திருக்கிறார் காளி வெங்கட். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com