மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | சதுரங்க வேட்டை | “என்னது.. இளைய தளபதி தாக்கப்பட்டாரா?”

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் ‘இளவரசு’ ஏற்று நடித்திருந்த ‘செட்டியார்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசுசதுரங்க வேட்டை திரைப்படம்
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

மனிதர்களின் ஆசைகள் பெருகப் பெருக அவர்களை ஏமாற்றும் கலையும் கூடவே பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வுலகில் எத்தனையோ விதமான மோசடிகள் ஏற்கெனவே நடந்திருந்தாலும், மனிதன் தொடர்ந்து ஏமாறுவது இன்று வரை குறையவில்லை. இதற்கான அடிப்படை காரணம் பேராசை. சுலபமாக பணம் சம்பாதிப்பதற்குப் பின்னுள்ள பேராசை. அந்தக் குறுக்கு வழியில் நிறைய ஆபத்துகளும் இருக்கக்கூடும் என்கிற யதார்த்தத்தை பார்க்க முடியாதபடி ஆசை அவர்களின் கண்ணை மறைத்து விடுகிறது.

சதுரங்க வேட்டை
சதுரங்க வேட்டை

இன்றைய நவீன உலகில் ‘ஏமாற்றும் கலையானது’ எப்படியெல்லாம் விதம் விதமாக பரிணமித்திருக்கிறது என்பதை சிறப்பாக சித்திரித்திருந்த படம் ‘சதுரங்க வேட்டை’.

18 ஜூலை 2014’ அன்று வெளியான இந்தத் திரைப்படம் இன்றுடன் பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. எனவே இதுதொடர்புள்ள திரைப்படத்தை மீள்நினைவு செய்யும் விதத்தில் இந்தப் படத்தில் வரும் ஒரு துணை கதாபாத்திரத்தைப் பற்றி இந்த வாரக் கட்டுரையில் பார்ப்போம்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | Dancing Rose | “அதுக்காகல்லாம் ரோஸை அடிச்சுட முடியாது..”

சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் இளவரசு

தமிழ் சினிமாவில் உள்ள மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர் இளவரசு. அடிப்படையில் அவர் ஒரு சினிமா ஒளிப்பதிவாளர். பல படங்களுக்கு கேமிராமேனாக பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கண்ணனுக்கு உதவியாளராக இளவரசு இருந்த சமயத்தில், பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. தனது உதவியாளர்களை ஏதாவது ஒரு காட்சியில் நடிக்க வைத்து விடும் வழக்கமுள்ள பாரதிராஜா, இளவரசுவையும் அப்படியாக ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் சந்தையில் போட்டோ எடுக்கும் ஆசாமியாக நடிக்க வைத்தார்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு

ஒளிப்பதிவாளர் பணி என்பது பிரதானமானது என்றாலும் அதன் பிறகு பல சிறிய காட்சிகளில் நடிகராக வந்து போனார் இளவரசு.  ஒரு கட்டத்தில் கவனத்திற்குரிய நடிகராக மாறினார். அதன் பிறகு அவரது பாதையும் மாறிப் போனது. துணை நடிகராக அவரது நடிப்பு பல படங்களில் பிரகாசித்தது. இளவரசு நடிக்க ஆரம்பித்திருந்த காலக்கட்டத்தில், அவர் யாரென்று தெரியாத நிலையில், ஒரு திரைப்படத்தில் அவரது இயல்பான நடிப்பைப் பார்த்து அசந்து போனேன். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்|'மனதில் உறுதி வேண்டும்'- எஸ்.பி.பி ஏற்று நடித்த Dr.அர்த்தநாரி!

‘வேதம் புதிது’ திரைப்படத்தில், அக்ரஹாரத்தால் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கப்படும் பிராமணச் சிறுவனுக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் தருவார் பாலுத் தேவர். தன்னுடைய வாரிசாக ஏற்றுக் கொள்ளவும் திட்டமிடுவார். பாலுத்தேவரின் தங்கை மகனான இளவரசுக்கு இந்தச் செயல் எரிச்சலூட்டும். சொத்து பறிபோகும் என்கிற பயம். எனவே பிராமணச் சிறுவனை பயமுறுத்தி விரட்டும் நோக்கில் “உனக்கு என்னவெல்லாம் தெரியும்?” என்று எகத்தாளமாக கேட்பார்.

வேதம் புதிது படத்தில் இளவரசு
வேதம் புதிது படத்தில் இளவரசு

“வேதம்லாம் கொஞ்சம் தெரியும்” என்று அந்தச் சிறுவன் அப்பாவித்தனமாகச் சொல்ல, ‘ப்வொவ்.. ப்வொவ்’ என்று மாடுகளை ஓட்டும் ஒலியை வாயால் எழுப்பி “இதெல்லாம் தெரியுமா.. இந்த வீட்டுக்கு வந்தா.. செம்மறியாட்டுக்கும் வெள்ளாட்டுக்கும் வித்தியாசம் தெரியணும்.. காளை மாடு எது.. பசு மாடு எதுன்னு பார்க்கணும்.. காலைல வயலுக்குப் போகணும். உழுகணும்.. ஆனானப்பட்ட தங்கச்சி மகன் நான் எட்டாப்பு படிச்சிருக்கேன்.. என்னையே ஆடு மாடு மேய்க்கப் போட்டிருக்காரு.. நீ சோறு தின்னுட்டு சும்மா இருக்கலாம்ன்னு பார்க்கறியா.. காலைல என் கூட வரணும்டியேய்..” என்று எகத்தாளமாகச் சொல்லும் காட்சியில் இளவரசுவின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கும்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 42- இயல்பான நடிப்பில் பிரமிட் நடராஜன்- அலைபாயுதே

ஏமாற்றும் கலையின் பலியாடுகள்

இப்படி பல திரைப்படங்களில் கவனிக்கத்தகுந்த துணை பாத்திரமாக இளவரசு நடித்திருந்தாலும் அதில் குறிப்பிடத்தகுந்த பாத்திரமாக ‘சதுரங்க வேட்டையில்’ வரும் மளிகைக்கடை செட்டியார் பாத்திரத்தைச் சொல்லலாம்.

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக இருந்தாலும் படத்தில் அவரது பாத்திரப் பெயரே ‘செட்டியார்’தான். வணிகத்தின் மூலம் பொருள் ஈட்டியிருந்தாலும் பணத்தாசை அடங்காத ஒரு பேராசைக்காரனின் சித்திரத்தை இளவரசு மிக நுட்பமான முகபாவங்களால் நடித்து அசத்தியிருந்தார்.

அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டு உள்ளுக்குள் பணத்தின் மீது கொள்ளை ஆசை கொண்டிருக்கும் விதத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார்.
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 41 | ‘நான் வாழ வைப்பேன்’ ஸ்டைலிஷ் ரஜினிகாந்த்!

பணக்காரர்களின் பேராசையை முதலீடாகக் கொண்டு அவர்களை விதம் விதமான நூதன வழிகளில் ஏமாற்றும் காந்திபாபு என்கிற ஆசாமி செட்டியாரை அணுகுகிறான். இருதலை மணியன் என்கிற மண்ணுளிப்பாம்பு வகையை வைத்திருந்தால் அதிர்ஷ்டம், நோய்க்கு மருந்து என்கிற மூடநம்பிக்கைகள் பரவியிருப்பதால் அதை ரகசியமாக வைத்துக் கொள்ள சிலர் விரும்புகிறார்கள். இந்த மூடநம்பிக்கைதான் காந்தி போன்ற ஏமாற்றுக்காரர்களின் முதலீடு. 

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

“ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்.. யாருக்கும் அமையாது”

“தம்பி சுரேஷ் போன்ல சொன்னான்.. நான் கூட பேப்பர்ல படிச்சிருக்கேன். நம்பறதா இல்லையான்னு தெரியல. நான் எதுக்கும் யோசிச்சு சொல்றேன்..” என்று அசுவாரஸ்யமான முகத்தை பாவனையாக வைத்துக் கொண்டு பதில் சொல்கிறார் செட்டியார். ஒரு பொருளை வாங்குவதற்கு உள்ளுக்குள் விருப்பம் இருந்தாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளக்கூடாது என்பது வணிகத்தின் பாலபாடம். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

ஆனால் காந்தி பாபு செட்டியாரைப் போல பல நபர்களை ஏற்கெனவே பார்த்தவன். எனவே ஆசையைத் தூண்டும் விதமாகப் பேசுகிறான். “நல்லா யோசிங்க செட்டியார்.. என் கிட்ட பணம் இல்ல. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைஞ்சிடாது. இது ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்… நாம போடப் போறது அஞ்சு லட்சம்தான். ஆனா கிடைக்கப் போறது 15 கோடி” என்று காந்தி சொல்ல செட்டியாரின் கண்கள் ஆசையில் விரிகின்றன. “அவன் கண்ல ஜோதியைப் பார்த்துட்டேன். நிச்சயம் வருவான்” என்று பிறகு தனது நண்பர்களிடம் சிரித்துக் கொண்டே சொல்கிறான் காந்தி.

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

படிய வாரிய தலைமுடி, எழுபதுகளின் சினிமா நாயகர்களைப் போன்ற பென்சில் மீசை, நெற்றியில் குங்குமம், தங்கச் சங்கிலி, வெள்ளை சட்டை, வேட்டி, வெளியே அப்பாவித்தனமான ஆனால் உள்ளுக்குள் தந்திரமான முகம் என்று ஒரு மளிகைக்கடை வணிகரின் தோற்றத்தை சிறப்பாகக் கொண்டிருந்தார் இளவரசு. காட்சிகளுக்கேற்ப விதம் விதமாக மாறும் இவரது  முகபாவங்களைக் கவனிப்பதே அத்தனை சுவாரசியமாக இருக்கும்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 39 | ‘இப்படியொரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’- சேது ஸ்ரீமன்

“பாம்புக்கு 200 மொழி தெரியும்”

மறுநாள் செட்டியாரே காந்திக்கு போன் செய்கிறார். “நல்லா யோசிச்சிட்டேன் தம்பி.. உங்களை நம்பித்தான் இறங்கறேன்.. நானே கஷ்டப்படறவன். ஏழை.. பார்த்துக்கங்க” என்று நோட்டுக்கற்றையை இடது கையால் புரட்டிக் கொண்டே செட்டியார் சொல்வது சுவாரசியமான முரணாக இருக்கிறது. “இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நீங்க கோடீஸ்வரர்” என்று காந்தி சொல்ல செட்டியாரின் முகத்தில் பெருமிதம் வழிகிறது. “பணம் ரெடி தம்பி.. நாளைக்கே போயிடலாம்” என்று இவரே அவசரப்படுத்துகிறார்.

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

காருக்குள் செட்டியாரை ஏற்றிக் கொள்ளும் காந்தி நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு ஓரிடத்தில் இறங்குகிறான். பனைமரங்கள் சூழ்ந்திருக்கும் மணற்பரப்பில் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இருதலை மணியன்கள் உலர் மணல் பரப்பில் வாழும் உயிரனம் என்பதால் இந்த லாஜிக் சரியாக இருக்கிறது. சாமியார் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவன் “இவர்தான் பார்ட்டியா..? வாங்க” என்று மேலும் நீண்ட தூரத்திற்கு அழைத்துச் செல்கிறான். “இதுக்கு மேல யாரும் பேசக்கூடாது” என்று வாயில் விரல் வைத்தபடி அவன் எச்சரிக்க, செட்டியாருக்குப் புரியாமல் “ஏன்?” என்று அப்பாவித்தனமாக கேட்கிறார். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 38 | தடுமாற்றத்தால் சறுக்கிவிழும் இளைஞனாக ‘திலீப்’

ஒரு சாக்குப்பையில் இருந்து இருதலை மணியனை அந்த ஆசாமி வெளியே எடுக்க பயந்து போய் காந்தியின் பின்னால் ஒளிந்து கொள்கிறார் செட்டியார். “ரோ் பீஸ் செட்டியார். நாலு கிலோ எடைல கிடைக்கறது ரொம்ப அபூர்வம். யாருக்கும் இப்படி அமையாது” என்று பில்டப்பை கூட்டி காந்தி சொல்ல பெருமிதத்தால் செட்டியாரின் முகம் பொங்குகிறது. “ஏன் அந்தாளு பேசக்கூடாதுன்றான்?” என்று செட்டியார் பிறகு விளக்கம் கேட்க “பாம்புக்கு 200 மொழி தெரியும். நாம பேசறதுல்லாம் அதுக்கு கேட்கும். நம்மள இங்க இருந்து கூட்டிட்டுப் போறாங்கன்னு அதுக்கு எடை மெலிஞ்சா அவ்வளவுதான். மொத்தமும் வேஸ்ட்டு” என்று காந்தி சொல்ல “அப்படியா.. இனிமே நான் பிறவி ஊமை தம்பி” என்று அப்பாவித்தனமாக கேட்டுக் கொள்கிறார் செட்டியார். 

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

பேராசை படுத்தும் அவஸ்தைகள்

திரும்பி காரில் வரும் போது செட்டியாரின் முகம் மந்தகாசமாக இருக்கிறது. இன்னமும் இரண்டு நாட்களில் தான் கோடீஸ்வரன் என்கிற ஆனந்தப் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார். “என்னங்க.. அது பைல.. ஏதோ நெளியுது?” என்று கால் டாக்ஸி டிரைவர் சந்தேகம் கேட்க “பேசாம வாய்யா..” என்று பதறிப் போய் சைகையிலேயே அவனை செட்டியார் அதட்டும் காட்சிகளில் இளவரசுவின் நடிப்பில் நகைச்சுவை கொப்பளிக்கிறது.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 37 | ‘நான் பெத்த மகனே’ மனோரமா | மிகையான அன்பும் மனச்சிக்கலே!

பாட்டு கேட்க விடாமல், செல்போனில் பேச  விடாமல் தன்னைத் தடுத்துக் கொண்டேயிருக்கும் செட்டியாரின் மீது கோபம் கொள்ளும் டிரைவர், ஒரு கட்டத்தில் வண்டியை நிறுத்தி “என்னய்யா.. நெனச்சிட்டு இருக்கே..?” என்று கோபத்துடன் கேட்க “பேசினா.. எடை குறையற வியாதி எனக்கு இருக்குப்பா” என்று திருட்டுக் கெஞ்சு கெஞ்சுகிறார். 

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

அதற்குள் செட்டியாருக்கு ஒரு போன் வருகிறது. “என்ன செட்டியாரே.. டபுள் டெக்கர் உங்க கைல வந்துடுச்சாம்ல.. அதான் ரெட்டைத்தலை உளி.. 20 கோடிக்கு ஒரு பார்ட்டி இருக்கு.. யாருக்கும் கொடுத்துடாதீங்க. வந்துடறோம்” என்று அந்த அநாமதேய குரலான் சொல்ல அந்த உரையாடலுக்கு ரகசியமான குரலிலேயே பதில் சொல்லும் இளவரசுவின் மாடுலேஷன் அத்தனை அட்டகாசமாக இருக்கும். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 33 | சூது கவ்வும் | ‘ஞானோதயம்’ பெறும் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர்

பிறகு காந்தியிடம் “என்னப்பா. நீ பதினைஞ்சு கோடின்னு சொன்னே. இன்னொரு பார்ட்டி 20 கோடி தரேன்னு சொல்றாங்க..” என்று பேராசையுடன் கேட்க “செட்டியார்.. அவங்க யாருன்னு தெரியாது. முதல்ல பேசினவங்களுக்கு தர்றதுதான சரி” என்று காந்தி பாவனையாக நேர்மை பேச “அதையெல்லாம் தூக்கிப் போடு. வாழ்க்கைல பணம் ரொம்ப முக்கியம் தம்பி” என்று தத்துவம் பேசுகிறார் செட்டியார். இதெல்லாம் ஏமாற்றுக் கும்பல் இணைந்து செய்கிற செட்டப் என்கிற எளிய உண்மை கூட அவருக்கு உறைப்பதில்லை. ஆசை கண்களை மட்டுமல்ல காதுகளையும் மறைத்து விடுகிறது. ஒருவகையில் செட்டியாரும் இரட்டைதலை மணியன்தான். 

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

“இளைய தளபதி சாப்பிட்டாரா.. தூங்கினாரா?”

“என்னதான் இருந்தாலும் பாம்பை வீட்டுக்குள்ள வெச்சிட்டு இருக்கறது ஒரு மாதிரியா இருக்குது தம்பி” என்று செட்டியார் சொல்ல “பாம்புன்னு சொல்லாதீங்க செட்டியார்.. வெளில தெரிஞ்சிடும். பேசாம அதுக்கு ஒரு பெயர் வெச்சிடலாம். இளைய தளபதி விஜய்ன்னு வெச்சிடலாமா?” என்று காந்தி கேட்க, குழந்தைத்தனமான உற்சாகத்துடன் ‘டபுள் ஒகே’ என்று தலையாட்டுகிறார் செட்டியார். (யோவ் வினோத்து.. நக்கல்யா உனக்கு!). 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 1 | 'அவள் அப்படித்தான்' தியாகு நினைவில் இருக்கிறாரா..?

வீட்டிற்குள் எந்தவித சத்தமும் வராமல் இருக்க செட்டியார் படும் பாடுகள் அனைத்தும் நகைச்சுவை பட்டாசுகள். டிவியை மியூட்டில் வைத்து காமெடி காட்சியைப் பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு புன்னகைக்கிறார். மூட்டையின் அருகில் பயத்துடன் சென்று எலியை உணவாக அளிக்கிறார். அவ்வப்போது மூட்டையை பிரியத்துடன் தடவிப் பார்க்கிறார். “என்ன செட்டியார் விஜய் சாப்பிட்டாரா?” என்று காந்தி போனில் கேட்க “காலைல சாப்பாடு கொடுத்துட்டு மதியமும் சாப்பாடு வெச்சிட்டு இப்பத்தான் கடைக்கு வந்தேன் தம்பி” என்று ஏதோ மருத்துவ சிகிச்சையில் இருக்கும் உறவினரைப் போல செட்டியார் பதில் சொல்வது சுவாரஸ்யமான காட்சி.

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

விஜய் 20 கோடி சம்பாதித்துக் கொடுக்கப் போகும் இன்பத்தைத் தாங்க முடியாமல் செட்டியார் உறக்கம் வராமல் தவிப்பதும், ஏதேதோ மனக்கணக்குப் போட்டு விட்டு முகத்தில் பெருமிதம் வழிய கம்பீரமாக அமர்ந்து பார்க்கும் மௌனமான காட்சிகளில் இளவரசுவின் முகபாவமும் நடிப்பும் அட்டகாசமாக இருக்கும்.

கோயில் ஒலிப்பெருக்கியில் சாமிப்பாடல் அலற ‘அய்யய்யோ’ என்று பதறிப் போகும் செட்டியார் “இதனாலதான் இந்தியா வல்லரசு ஆக மாட்டேங்குது” என்று சம்பந்தமில்லாமல் முனகி எரிச்சல்படுவதும் சுவாரசியமான காட்சி. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!

“என்னது.. இளைய தளபதி தாக்கப்பட்டாரா?”

பணப்பையுடன் வரும் கரூர் பார்ட்டி, பாம்பின் எடை, மன்னிக்க விஜய்யின் எடை குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து திரும்பிப் போக பணப்பையையே பெருமூச்சுடன் நீண்ட நேரம் பார்க்கும் செட்டியார் “இப்ப என்னப்பா பண்றது?” என்று காந்தியிடம் கேட்க “நீங்க ஏதாவது பேசியிருப்பீங்க. அதான் எடை குறைஞ்சிருக்கு.

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

ஒண்ணும் பிரச்சினையில்ல.. இதுக்குன்னு ஸ்பெஷல் டாக்டர் சென்னைல இருந்து வரவழைக்கலாம். ரெண்டு லட்சம் ரூபா செலவாகும்” என்று காந்தி சொல்ல, இருபது கோடி கிடைக்கும் ஆசையில் அதற்கும் ஒத்துக் கொள்கிறார் செட்டியார். கதவை மூடிக் கொண்டு மருத்துவம் நடக்கும் போது கதவிற்கு வெளியே பிரசவ வார்டில் கணவன் உலவுவது போல செட்டியார் இங்கும் அங்குமாக உலவுவது நல்ல காமெடி. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

செட்டியாரின் குடும்பம் திடீரென திரும்பி வந்து விட “அப்பா.. வீட்டுக்குள்ள பாம்பு புகுந்துடுச்சு.. அடிக்கறதுக்கு அம்மா கட்டையைத் தேடிட்டு இருக்காங்க” என்று மகன் போனில் சொல்லும் தகவலைக் கேட்டு “அய்யோ.. விஜய்யை அடிக்காதீங்கடா” என்று பதறியபடியே ரோட்டில் ஓடுகிறார் செட்டியார். “இந்தாளுக்கு கிறுக்கு முத்திடுச்சு போல” என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

வீட்டின் வெளியே பெருங்கூட்டம் நிற்க உள்ளே சென்று பார்க்கும் செட்டியார் அதிர்ச்சியில் உறைகிறார். பாம்பு தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. ‘அய்யோ.’ என்று அலறும் செட்டியார், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டு சைகையிலேயே அனைவரையும் வீட்டை விட்டு கொலைவெறியுடன் வெளியேற்றும் காட்சி ரகளையானது. 

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

‘பேராசை, பெருநஷ்டம் - எளிமையான லாஜிக்

“விஷயம் தெரியாம என் பொண்டாட்டி விஜய்யை அடிச்சிட்டாப்பா” என்று செட்டியார் போனில் காந்தியிடம் சொல்ல “என்னது.. இளைய தளபதி தாக்கப்பட்டாரா?” என்று காந்தி கேட்குமிடத்தில் நக்கலும் நையாண்டியும் பெருகி வழிகிறது.

‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு
‘சதுரங்க வேட்டையில்’ இளவரசு

நடந்த விஷயத்தை மனைவியிடம் செட்டியார் சொல்ல “அய்யோ.. இது தெரியாம விஜய்யை தாக்கிட்டேனே” என்று அவரும் கதறியழ “ரெண்டு பேரும் லூஸா.. பாம்புக்கு காதே கேட்காது. அதுக்கு எப்படிப்பா 200 மொழி தெரியும். உங்களை எவனோ நல்லா ஏமாத்தியிருக்கான்.. இப்படித்தான் ஊர்ல நிறைய மோசடி நடக்குது. நீங்க அதையெல்லாம் பார்த்ததே இல்லையா?” என்று இணையத்தில் தகவல்களைத் தேடி செட்டியாரின் மகன் சொல்கிறான். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - இளவரசு
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 34 | உணர்ச்சிகரமான உயிர் நண்பன் ‘ரகு’வாக ‘சலங்கை ஒலி’ சரத்பாபு!

அப்போதும் செட்டியாருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. “இவரு பெரிய விஞ்ஞானி.. போடா” என்று அவனை விரட்டி விட்டு காந்தியிடம் அதைப் பற்றி விசாரிக்க “செட்டிக்கு டவுட் வந்துடுச்சு... வண்டியைத் திருப்புங்கடா” என்று காந்தி உஷாராகி தப்பித்து விடுகிறான். 

‘சதுரங்க வேட்டை’
‘சதுரங்க வேட்டை’

வணிகத்தின் மூலம் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஆசாமியாக இருந்தாலும் குறுக்குவழியில் மேலும் பணத்தைக் குவிக்க அலையும் ஒரு பேராசைக்காரரின் சித்திரத்தை தனது திறமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் இளவரசு. ‘சதுரங்க வேட்டை’யில் எத்தனையோ துணை நடிகர்கள் இருந்தாலும் பேராசை காரணமாக அப்பாவித்தனமாக ஏமாறும் ‘செட்டியார்’ பாத்திரத்தை என்னென்றும் மறக்க முடியாது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com