மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கடைசி விவசாயி | நீதிபதி ‘மங்கையரக்கரசி’யாக ரெய்ச்சல் ரபேக்கா

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் ‘ரெய்ச்சல் ரபேக்கா’ ஏற்று நடித்திருந்த ‘மங்கையரக்கரசி’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி - கடைசி விவசாயிபுதிய தலைமுறை
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பிரபலமான முகங்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. அவரது முகம் மக்களுக்கு துளி கூட பரிச்சயமே இல்லாவிட்டாலும் தங்களின் திறமையான நடிப்பின் மூலம் ‘யார்ரா இவிய்ங்க?’ என்று மனதிற்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டாலே போதும். தனது இயல்பான நடிப்பின் மூலம் அப்படியொரு ஆச்சரியத்தை நமக்குள் ஏற்படுத்தியவர்

ரெய்ச்சல் ரபேக்கா
Raichal rabecca
Raichal rabecca

கடைசி விவசாயி’ திரைப்படத்தைப் பார்த்த எவருமே, பெரியவர் மாயாண்டியைப் போலவே ‘ஏ.. யாருப்பா. இந்தப் பொண்ணு?’ என்று கேள்வி கேட்டிருப்பார்கள். ‘ஜட்ஜம்மா’ பாத்திரத்தில் அப்படியாக அசத்தியிருந்தார் ரெய்ச்சல் ரபேக்கா. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘காதலும் கடந்து போகும்’ மணிகண்டன்!

ஆயுர்வேத மருத்துவமும் நடிப்பின் மீதான ஆர்வமும்

இவர் அடிப்படையில்  ஒரு ஆயுர்வேத மருத்துவர். யூட்யூப் பிரபலம். இணைய வீடியோக்களில் உடல்நலம் தொடர்பாக ஏராளமான மருத்துவ வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். ஆயுர்வேத மருத்துவம் என்பது ரெய்ச்சலின் தந்தையிடமிருந்து திணிக்கப்பட்ட ஆர்வம் எனலாம். உண்மையில் இளமையில் இருந்தே ரெய்ச்சல் ரபேக்கவாவிற்கு நடிப்பின் மீதுதான் அதிகமான ஆர்வம் இருந்தது. தந்தையின் வற்புறுத்தல் காரணமாக ஆயுர்வேத மருத்துவ கல்வியை கையில் எடுத்தவருக்கு ஒரு கட்டத்தில் இயல்பாகவே அதில் ஆர்வமும் தேடலும் வந்து விட்டது.

Raichal rabecca
Raichal rabecca

ஆயுர்வேத கல்வி ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் தணியாமல் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த காரணத்தால், பல இடங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டிருந்த ரெய்ச்சல் ரபேக்கா, இயக்குநர் மணிகண்டனிடமும் அப்படியொரு வாய்ப்பை கேட்டு வைத்திருக்க, மூன்று வருடங்களுக்குப் பிறகு கிடைத்ததுதான் ‘கடைசி விவசாயி’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு.

ஆனால் தரமான காத்திருப்பு. படத்தைப் பார்த்த விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் ரெய்ச்சலின் நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். ‘குட்நைட்’, சமீபத்தில் வெளியான மெய்யழகன் போன்ற படங்களிலும் ரெய்ச்சல் நடித்திருக்கிறார். ‘பக்கத்து வீட்டுப் பெண்’ மாதிரியாக இருக்கிற ரெய்ச்சலின் இயல்பான தோற்றமே அவரது பிளஸ் பாயிண்ட் எனலாம். 

ரெய்ச்சல் ரபேக்கா
ரெய்ச்சல் ரபேக்கா

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் ரெய்ச்சலின் நடிப்பு குறித்து எழுதும் போது ‘இந்தந்த சீன்களில் கலக்கிட்டாருல்ல’ என்று பிரத்யேகமாக அதிகம் குறிப்பிட முடியாது. ஏனெனில் பெரும்பாலான காட்சிகளில் அவரது நடிப்பு யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எனவே நுட்பமாக வெளிப்படும் முகபாவங்களின் மூலம்தான் சற்றாவது அதை விவரிக்க முடிகிறது. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | திருநங்கையாக ‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய்சேதுபதி

‘ஜட்ஜம்மா’ கேரக்டரில் அசத்தியிருக்கும் ரெய்ச்சல் ரபேக்கா

நீதிமன்றத்தின் கடிகாரம் பத்து மணியை அடித்தவுடன் உள்ளே நுழையும் நீதிபதியான மங்கையர்க்கரசி,  சபையைப் பார்த்து வணக்கம் வைத்து ‘சரி ஆரம்பிக்கலாம்’ என்கிற மாதிரி தலையாட்டுகிறார். முதல் வழக்கு ஒரு பங்காளிச் சண்டை. சம்பந்தப்பட்டிருப்பவர் அறுபது வயதுக்காரர். ‘ஒரு சென்ட் நிலத்துக்கா உங்க தம்பியோட மண்டையை உடைச்சீங்க?’ என்று நீதிபதி கண்டிப்பான குரலில் கேட்க, "இது நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்து. லேசில விட்றச் சொல்ற?” என்று குற்றம் சாடப்பட்டிருக்கும் பெரியவர் மீசையை முறுக்க “இது கோர்ட்டு. இப்படில்லாம் சத்தம் போட்டா தூக்கி உள்ளே வெச்சுடுவேன்" என்று தனது கண்டிப்பை நிதானமான குரலில் வெளிப்படுத்துகிறார் நீதிபதி.

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி - கடைசி விவசாயி

‘அந்தப் பொண்ணு யாரு?’ என்று ஜட்ஜம்மாவைப் பார்த்து வெள்ளந்தியாக விசாரிக்கிறார் பெரியவர் மாயாண்டி. “அவங்கதான் தலைக்கெல்லாம் தலை” என்று நீதிபதியின் அதிகாரத்தை சைகையால் விவரிக்கிறார் ஏட்டய்யா. அடுத்ததாக பெரியவரின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ‘இந்த வயசுல இவர் என்ன தப்பு செஞ்சாரு?’ என்று நீதிபதி தன்னிச்சையாக முணுமுணுக்கிறார். “உங்க மேல இருக்கற வழக்கு என்னன்னு தெரியுமா?” என்று பெரியவரிடம் விசாரிக்கப்பட, காது சரியாக கேட்காத பிரச்சினை காரணமாக பெரியவர் அமைதியாக நிற்கிறார். 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘கார்கி’ இந்திரன்ஸ் கலியபெருமாளாக காளி வெங்கட்!

“யாராவது அவர் கிட்ட பேசி சொல்லுங்க” என்று நீதிபதி சொன்னவுடன் ஊர்க்கார இளைஞன் வந்து உதவுகிறான்.

“ஏன் மயிலைக் கொன்னு புதைச்சாருன்னு கேளுங்க?” என்று நீதிபதி கேட்க “சுப்ரமணியனோட வாகனத்தைப் போய் யாராவது கொல்லுவாங்களா.. மயில் அழகான பறவை. அதைப் போய் யாரு கொல்லுவா.. நான் பண்ணதா யாரு சொன்னாங்க.. இந்த ஏட்டய்யா சொன்னாரா?” என்று பெரியவர் கேள்விகளாக கேட்க, அப்போதே நீதிபதிக்கு புரிந்து விடுகிறது. இது பெரியவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு என்று. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி - கடைசி விவசாயி

நீதியின் இறுக்கமும் அதனைத் தாண்டிய கனிவும்

“இன்ஸ்பெக்டரை வரச் சொல்லுங்க” என்று நீதிபதி சொல்ல, ‘நீதிவாசன்’ என்கிற பெயர் கொண்ட ஆய்வாளர் வருகிறார். (பெயரில் உள்ள குறும்பைக் கவனித்தீர்களா?!). நீதிபதி இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் போது ஏதேதோ சொல்லி அவர் உளறுவதும், சாட்சி சொல்ல வந்த ஆசாமி “புதைச்சதைப் பார்த்தேம்மா.. கொன்னத பார்க்கலை” என்று சொல்வதும் நீதிபதியின் யூகத்தை உறுதிப்படுத்துகிறது. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| ’மலர்விழி’ ஆக ’இறைவி’-ல் மின்னலென வெட்டிச் சென்ற பூஜா தேவரியா!

இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது “ஏம்ப்பா.. போகச் சொல்லிட்டாஹலா?” என்று கேட்கும் பெரியவருக்கு தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்கின் தீவிரம் எதுவும் தெரியவில்லை.

“பயிருக்கு தண்ணி பாய்ச்சணும்மா.. குலத்தெய்வத்திற்கான நெல் போட்டிருக்கு. நான் போயிட்டு வந்துடவா.. அதுவும் உயிர்தானே. ஒரு உயிருக்கு ஆயிரம் உசுருங்க போகலாமா?” என்றெல்லாம் பெரியவர் வெள்ளந்தியாக கேட்க “இப்படிப்பட்ட நபரைத்தான் மயிலைக் கொன்னதா கேஸ் போட்டிருக்கீங்களா சார்?” என்று இன்ஸ்பெக்டரை நீதிபதி கேட்க, அவர் திருதிருவென்று விழித்து “இல்லீங்கம்மா.. போன வருஷம் சில பசங்க மயிலைக் கொன்னுட்டாங்க. விசாரணைக்குப் போனா தகராறு பண்ணாங்க. அதான்.. ஒரு பயம் வரணும்னு” என்று இன்ஸ்பெக்டர் வேறு வழியில்லாமல் உண்மையைக் கக்கி விடுகிறார். 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி - கடைசி விவசாயி

“இதோ பாருங்க. உண்மையான குற்றவாளிங்களைப் பிடிக்க முடியலைன்னா சும்மா இருங்க. அதுக்காக நல்லவங்களைக் கூட்டிட்டு வந்து கேஸ் போடுவீங்களா?” என்று மென்மையான குரலில் கண்டிக்கும் நீதிபதி, வயலில் நீர் பாய்ச்சுவது, மாடு, கன்றுகளைப் பராமரிப்பது போன்ற பணிகளுக்காக ஏட்டய்யாவை நியமிக்க, அவர் ‘நான் போய்..’ என்று தயங்க “என்னது.. சொல்லுங்க” என்று நீதிபதி சற்று அழுத்தமான குரலில் கேட்க ‘சரிங்கம்மா’ என்று வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்கிறார். 

இயல்பான முகபாவங்களால் அசத்தியிருக்கும் ரெய்ச்சல்

பொியவர் நிரபராதி என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்தாலும் சட்ட நடைமுறைகளின் படி உடனே விடுதலை செய்ய முடியாது. எனவே பதினைந்து நாட்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிடுகிறார் நீதிபதி. ‘இந்தப் பொியவருக்குப் போய் இப்படிச் செய்ய வேண்டியிருக்குதே’ என்கிற கவலை நீதிபதியின் முகத்தில் அழுத்தமாக உறைந்திருக்கிறது.

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி - கடைசி விவசாயி

15 நாட்களுக்குப் பிறகும் இன்ஸ்பெக்டரிடமிருந்து M.F. ரிப்போர்ட் வருவதில்லை. எனவே மேலும் 15 நாட்களுக்கு பெரியவரை ரிமாண்டில் வைக்க வேண்டியிருக்கிறது. ‘உங்க இன்ஸ்பெக்டரை வரச் சொல்லுங்க..  வயலுக்கு சரியா தண்ணி பாய்ச்சறீங்களா?” என்று ஏட்டய்யாவை கறாராக விசாரிக்கிறார் நீதிபதி. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 42- இயல்பான நடிப்பில் பிரமிட் நடராஜன்- அலைபாயுதே

அடுத்த முறை பெரியவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிறார்கள். ‘பயிர்களுக்கு என்ன ஆச்சோ?’ என்கிற கவலையில் இருக்கும் பெரியவர், காவலர்கள் கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் ஒரு இளைஞனின் பைக்கில் ஏறி வயலைப் பார்க்கச் சென்று விடுகிறார். “ஒரு பெரியவரை கவனமா பார்த்துக்க முடியாதா.. போய்க் கூட்டிட்டு வாங்க”என்று இன்ஸ்பெக்டரை கடிந்து கொள்கிறார் நீதிபதி. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி - கடைசி விவசாயி

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் பெரியவரிடம் “என்னங்கய்யா இப்படிப் பண்ணீட்டிங்க. இன்னிக்கு உங்களுக்கு தீர்ப்புன்னு சொன்னேனே.. இன்னிக்கு நீங்க வீட்டுக்குப் போயிடலாம்” என்று நீதிபதி சொல்ல, பெரியவர் மௌனமாக உறைந்திருக்கிறார்.

“பயிர்லாம் செத்துப் போச்சுங்கம்மா” என்று யாரோ ஒருவர் தகவல் சொல்ல, ஏட்டய்யாவைப் போட்டு காய்ச்சுகிறார் நீதிபதி. “உங்களைத்தானே பார்த்துக்கச் சொன்னேன்? ஆயிரம் உயிருங்கன்னு பெரியவரு சொன்னாரு.. நான் பொறுப்பேத்து உங்க கிட்ட சொன்னேன். ஒரு வேலையை ஒழுங்கா செய்ய முடியாதா? என் வார்த்தைக்கு என்ன மரியாதை?  இப்ப இதுக்கு என்ன பதில் சொல்றது?” என்று நீதிபதி சரமாரியாக கேட்கும் கேள்விகளுக்கு ஏட்டய்யாவால் சரியாக பதில் சொல்ல முடிவதில்லை. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 37 | ‘நான் பெத்த மகனே’ மனோரமா | மிகையான அன்பும் மனச்சிக்கலே!

‘இப்படித்தாங்க ஒரு நீதிபதி இருக்கணும்’

“ஃபார்மாலிட்டிஸை முடிச்சு பெரியவரை சீக்கிரமா அனுப்பி வையுங்க” என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தாலும் அரசாங்க இயந்திரம் நத்தை வேகத்தில்தான் நகர்கிறது. பெரியவர் ரிலீஸ் ஆகி விட்டாரா என்கிற கவலை நீதிபதிக்குள் இருந்திருக்க வேண்டும் உயர் அதிகாரியை அழைத்து செல்போனில் விசாரிக்க “பேப்பர் வொர்க் போயிட்டு இருக்கும்மா” என்று அவர் சொல்ல நேரடியாக அந்த இடத்திற்கே வருகிறார் நீதிபதி. 

“பெரியவர் எங்க?” என்று நீதிபதி கேட்க, அவரோ ஒரு பெஞ்ச்சில் சலனமே இன்றி படுத்திருக்கிறார். பயிர்கள் இறந்து விட்ட துயரம் அவரது முகத்தில் பிரதிபலிக்கிறது. தொட்டு அசைத்தாலும் பெரியவரிடம் எந்தவொரு அசைவும் இல்லை. 

இந்த இடத்தில் ரெய்ச்சலின் நடிப்பு மிக அற்புதமாக அமைந்திருக்கும்.
கடைசி விவசாயி
கடைசி விவசாயி

பெரியவரின் மரணத்திற்கு (?!) நாமும் ஒருவகையில் காரணமாகி விட்டோமோ என்கிற துயரம், பதட்டம், கவலை, அதிகாரத்தின் இறுக்கமான முகத்தையும் தாண்டி எட்டிப் பார்க்கிற கண்ணீர் என்று பல்வேறு கலவையான உணர்வுகளை தனது முகபாவங்களில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சக சிறைவாசிகளில் ஒருவர் வந்து பொியவரை எழுப்ப முயன்று கோவென்று அழுது புலம்ப அப்போதும் பலனில்லை. ஆம்புலன்சிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். நீதிபதி பொறுமையிழந்து தவித்தபடி நிற்கிறார். 

எங்கிருந்தோ ஒரு மயிலின் அகவல் சத்தம் கேட்டதும் திடுக்கென்று கனவில் இருந்து விழித்தவரைப் போல பெரியவர் சட்டென்று எழுந்து அமர்கிறார். திகைப்பும் ஆச்சரியமுமாக பெரியவரைப் பார்க்கிறார் நீதிபதி. “என்னம்மா நான் போகலாமா?” என்று பெரியவர் கேட்க “போகலாம்யா.. உங்க தோட்டம் எங்க இருக்கு? என்னையும் கூட்டிட்டுப் போறீங்களா?” என்று நீதிபதி கேட்கும் போது இளம்பெண் மறைந்து பெரியவரின் மகள் போன்ற தோற்றம் தெரிகிறது.

தனது காரிலேயே பெரியவரை அழைத்துச் செல்கிறார் நீதிபதி. இவரது ஏற்பாட்டில் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து வயலைச் சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெரியவரும் அவர்களோடு இணைந்து கொள்ள அதனை மிக்க மகிழ்ச்சியுடன் பார்க்கிறார், நீதிபதி. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி - கடைசி விவசாயி

அதிகாரத்தின் இறுக்கமான முகம், கறார்த்தனம், மெல்லிய கண்டிப்பு போன்றவைகளைத் தாண்டி நீதியின் மேல் இருக்கும் உறுதி, எளிய மனிதர்களிடம் இருக்க வேண்டிய கனிவு, இந்த அமைப்பில் நல்லவர்கள் சிக்கி சிரமப்பட வேண்டியிருக்கிறதே என்கிற கரிசனம் என்று பல்வேறு உணர்வுகளை மிக இயல்பான உடல்மொழியில் வெளிப்படுத்தி “அடடா.. என்ன ஒரு நீதிபதி?” என்று பார்ப்பவர்களின் பிரியத்திற்கு ஆளாகும் வகையிலான பாத்திரத்தை ஏற்று அசத்தியிருக்கிறார் ரெய்ச்சல் ரபேக்கா. 

ரெய்ச்சல் ரபேக்கா - மங்கையரக்கரசி  -  கடைசி விவசாயி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | அழகிய தீயே | அதிசுவாரசிய அமெரிக்க மாப்பிள்ளையாக பிரகாஷ்ராஜ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com