“பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்” - நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி!

பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி பேச்சு... புகார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்கத் தடை என்றும் உறுதி...
நடிகர் சங்க கூட்டம்
நடிகர் சங்க கூட்டம்புதிய தலைமுறை
Published on

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த நடிகர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்க கூட்டம்
நடிகர் சங்க கூட்டம்

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடந்தக் பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் மற்றும் நடிகர், நடிகையர்கள் பலர் பங்கேற்றனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், கூட்டத்தில் பேசிய விஷால், அடுத்த பொதுக்குழு கூட்டம், நடிகர் சங்க சொந்தக் கட்டடத்தில் நடக்கும் என்றார்.

நடிகர் சங்க கூட்டம்
பாலியல் அத்துமீறல்கள்... மாணவி சொன்ன யோசனை.. சினிமாவில் மாற்றம் வருமா? #Video

நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக நடத்தப்படவுள்ள கமல் சம்மதித்திருப்பதாக கூறிய நடிகர் கார்த்தி, நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி சொந்தப் பணம் ஒருகோடியுடன், மொத்தம் 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் சங்க கூட்டம்
நடிகர் சங்க கூட்டம்

இதனிடையே, நடிகைகள் புகாரளிக்க, நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவரிடம் துணிச்சலாக புகாரளிக்கலாம் என்றும் கார்த்தி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்ட வேண்டும் என்பதால், நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீ்ட்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில், “இதுவரை சங்கத்தில் சில பாலியல் புகார்கள் வந்து, அவற்றை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். இதுபற்றி பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியே தெரியாமல் பாதுகாக்கும் நோக்கத்தில் வெளியே நாங்கள் சொல்லவில்லை. வெளியே சொல்லவில்லை என்பதால் புகாரே வரவில்லை, நாங்கள் தீர்த்து வைக்கவே இல்லை என்பது பொருள் இல்லை.

நாங்கள் சொல்வதெல்லாம் எந்தப் புகார் என்றாலும், சங்கத்தை அனுகி புகார் கொடுங்கள். மற்றபடி, பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். ஏனெனில் ஊடகங்களில் பேசுவதால் எந்தப் பலனும் இல்லை. புகார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்படும். புகாரளிப்பதை எளிமையாக்க, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. அதை நடிகர் நடிகைகள் பயன்படுத்தி புகார் அளிக்கவும்” என நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி உறுதியளித்திருக்கிறார்.

நடிகர் சங்க கூட்டம்
மலையாள சினிமா|புயலைக் கிளப்பும் பாலியல் புகார்கள்.. தெலுங்கு நடிகைகளுக்கும் பாதிப்பு.. சமந்தா பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com